உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்.ஐ.ஆர்., பணிக்கு முழு ஒத்துழைப்பு

எஸ்.ஐ.ஆர்., பணிக்கு முழு ஒத்துழைப்பு

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவங்கி உள்ளது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று, விண்ணப்பம் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பா.ம.க., நிர்வாகிகள், முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், தேர்தல் அலுவலர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு தவறாமல் செல்ல வேண்டும். அலுவலர்கள் வழங்கும் தகவல்களை குறிப்பெடுத்து, அறிவுரைகளை கேட்டு, சந்தேகங்கள் இருந்தால் தெளிவுபடுத்திக் கொண்டு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். - ராமதாஸ் நிறுவனர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சாமானியன்
நவ 06, 2025 07:19

ராமதாஸே சொல்லி விட்டார். தமிழகத்தின் உச்சநீதி மன்றம் தைலாபுரத்திலே. எல்லாரும் அவங்க அவங்க வேலையை பாருங்க. ம்ம்ம்.