உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருங்கால முதல்வரே போஸ்டர் சர்ச்சை: பா.ஜ., மீது அ.தி.மு.க., கடும் எரிச்சல்

வருங்கால முதல்வரே போஸ்டர் சர்ச்சை: பா.ஜ., மீது அ.தி.மு.க., கடும் எரிச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க முரண்டு பிடித்து வந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கடந்த வாரம் சென்னை வந்த அமித் ஷாவை சந்தித்து, அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார்.அப்போது, 'தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி, வரும் 2026 சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்கும்' என கூறினார். ஆனால், 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது; ஆட்சியில் பங்கு என்பதற்கே வாய்ப்பில்லை' என பழனிசாமி அறிவித்தார். இந்த முரண்பாடு தொடர்பாக பேட்டியளித்த தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், 'கூட்டணி ஆட்சி குறித்து, தேர்தல் நெருக்கத்தில் இரு கட்சித் தலைவர்களும் பேசி முடிவெடுத்து அறிவிப்பர்' என சொல்லி, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ardo0gdp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனாலும், இந்த விஷயத்தை விடாத அ.தி.மு.க.,வின் முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை, 'தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சிதான் அமையும்; பழனிசாமி தான் முதல்வராக பொறுப்பேற்பார். கூட்டணி ஆட்சி கிடையாது' என, பேட்டி அளித்தார். இதனால், கூட்டணி அமைந்து விட்டாலும், இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி ஆட்சி விவகாரம் தொடர் சர்ச்சையாகி உள்ளது.இந்நிலையில், தமிழக பா.ஜ.,வுக்கு புதிய தலைவராகி இருக்கும் நயினார் நாகேந்திரனின் சொந்த ஊரான திருநெல்வேலியில், அவருடைய ஆதரவாளர்கள், அவரை வரவேற்றும், வாழ்த்தியும் 'வருங்கால முதல்வரே' என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது அ.தி.மு.க.,வினரை எரிச்சலடையச் செய்து இருக்கிறது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

arunachalam
ஏப் 18, 2025 16:08

என்ன சொன்னாலும் அடிமட்டத்தில் இரு கட்சியின் தொண்டர்களும் ஒன்று சேர மாட்டார்கள். அப்படியே ஒன்று சேர்வார்கள் என பாஜாகா நினைத்தாலும், ஆதிமூகாவினர், தீமூக்காவுக்கே போன தடவை போல் ஓட்டளிப்பார்கள். ஏன் என்றால், எடப்பாடியின் எண்ணமே, பாஜாகாவை தமிழகத்தில் வளர விட கூடாது என்பதே. அண்ணாமலையை 2026 தேர்தல் வரை தலைவராக வைத்திருந்திருக்கலாம். ஆதிமூகாவுடன் சேர்ந்தது, எடப்பாடிக்காக அண்ணாமலையை பலிக்கடாவாக்கியது எல்லாம் மிகப்பெரிய தவறு என்பதை உணர அமித்ஷாவுக்கு அதிக நேரம் இல்லை. நிறைய வாக்குகளை பாஜாகா இழக்கும். எடப்பாடி முதுகில் குத்துவார்.


sankaranarayanan
ஏப் 18, 2025 13:27

அத்தைக்கு இப்போது மீசை இல்லை அந்த அத்தைக்கு மீசை முளைத்தால் என்ன சொல்வீர்கள் என்று கேட்டு சித்தப்பா என்று சொல்வீர்களா என்றால் என்னய்யா சொல்வது இது யாரோ எதிர் கட்சிகார்கள் செய்யும் சதி அதில் யாரும் வீழ்ந்து விடாதீர்கள் எச்சரிக்கயுடன் இருங்கள் அவர்கள் அ.தி.மு.க. வுடன் பா.ஜா.பா. கூட்டு சேருவதை விரும்பாதவர்கள் செய்யும் சதித்திட்டம்


Sridhar
ஏப் 18, 2025 12:35

மீண்டும் ஒருமுறை அமித் ஷா தமிழகம் வந்துபோனால் எல்லாம் சரியாயிடும். அவுருதான கூட்டணிக்கு உண்டான சட்டதிட்டங்களை யெல்லாம் எழுதிக்கொடுக்கறவரு?


Padmasridharan
ஏப் 18, 2025 12:31

உனக்கும்_எனக்கும் எதிரின்னா நீயும்_நானும் நண்பர்கள்.. இதனால வந்த வினைதான் எல்லாமே.. ஒரு கட்சியை இறக்க எந்தெந்த கட்சியெல்லாம் சேரணும்னு.. தனியா நின்னு ஜெயிக்க யாருக்கும் தைரியமில்லை


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 18, 2025 12:47

நம்ம கட்சி இதுவரைக்கும் எந்த தேர்தலல தனியா நின்னு ஜெயிச்சிருக்கு?


Rajathi Rajan
ஏப் 18, 2025 11:58

ஐயோ என்ன கொடுமை இது, நமது நிருபரின் கனவில் இப்படி மண்ணை அள்ளி போடுகிறார்களே , இந்த திருநெல்வேலி பிஜேபி என்னும் பழைய கட்சி காமெடி பீஸ்கள்...


Sankar
ஏப் 18, 2025 07:07

ரொம்ப சீக்கிரமாய் கூட்டணி அமைத்து விட்டார்கள் .இதை உடைக்க திட்டம் போடுவது போல் இருக்கிறது


Oviya Vijay
ஏப் 18, 2025 07:06

இந்தா நடந்திருச்சுல்ல... இன்னும் நல்லா சண்டை போடுங்கப்பா. பார்க்குறதுக்கு செம ஜாலியா இருக்கு. இனி ஒரு வருஷம் நான் டிவிக்கு ரீசார்ஜே பண்ண வேண்டியதில்லை. ஃபுல் என்டர்டைன்மெண்ட்டே இங்க கொட்டிக் கெடக்குறப்போ நான் எதுக்கு பணம் செலவு பண்ணி வேஸ்ட்டா ரீசார்ஜ் பண்ணிக்கிட்டு. இதுல ஒரு ஆச்சர்யம் என்னன்னா ஜெயிக்குற கூட்டணி கட்சிகள் இப்படி சண்டை போட்டுக்கிட்டாலாவது அதுல ஒரு அர்த்தம் இருக்கும். இவிங்க என்னடான்னா தோக்கப்போறது தெரிஞ்சும் சண்டை போடுறாங்களேப்பா... முடியல...


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 18, 2025 12:04

என்ன செய்ய கூட்டணி உடையாதா என்று நாக்கை தொங்க போட்டு காத்திருக்கு பல குள்ள நரிகளுக்கு அப்பப்ப சில எலும்பு துண்டு போட்டு வாழவெக்கனும் இல்ல.... அதுல எங்களுக்கும் ஒரு என்டர்டெய்ன்மெண்ட்....தேர்தல் முடியும் வரை இப்படி பிட்டு பிட்டா எலும்புகளை போட்டுக்கிட்டே இருப்போம்....!!!


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 18, 2025 12:51

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு 2021 தேர்தல் நடந்தபோது, வேட்பு மனு தாக்கல் செய்துவிட்ட வந்த அன்று மாலையே தன் வீட்டு முகப்பில் சண்முக சுந்தரம் எம் எல் ஏ என்று பித்தளையில் பெரிய போர்டு மாட்டிய உடன் பிறப்பைப்பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? மறுநாளே தினமலரில் புகைப்படத்துடன் செய்தியும் வெளியானது


அப்பாவி
ஏப் 18, 2025 06:20

மூணு மாசம்.கூட தாங்காது போலிருக்கே கூட்டணி?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 18, 2025 11:56

இது கொள்கை கூட்டணி.. சமரசம் செய்து கொள்ள நாள் தேவைப்படும். பெட்டி கூட்டணி அல்ல காலம் முழுக்க கொத்தடிமையாக இருக்க....!!!


Kanns
ஏப் 18, 2025 06:12

ADMK& TN Opposition is Thoroughly Destroyed by DMK Agent EPS& Co for Selfishly Protecting his/their PowerMisuses, Crimes& MegaLoots. ADMK Will Not Even Get Half of its Votes Even if All its Leaders Spent Heavily on VoteBribrries


pmsamy
ஏப் 18, 2025 05:49

கவுண்டமணி செந்தில் காமெடி மாதிரி சூப்பரா இருக்கு ஹா ஹா ஹா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை