உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாய், மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்த அனுமதி; சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

நாய், மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்த அனுமதி; சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: செல்லப்பிராணிகளின் வளர்ப்பை முறைப்படுத்த வசதியாக, நாய் மற்றும் மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்த அனுமதியளித்து சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் மொத்தம் 112 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், முக்கியமாக சென்னையில் செல்லப் பிராணிகளின் வளர்ப்பை முறைப்படுத்த, பிரத்யேக மென்பொருளை உருவாக்கி, நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தவும், மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் நவீன மாட்டு கொட்டகைகளில் அடைக்கப்படும் மாடுகளுக்கும் மைக்ரோ சிப் பொருத்தவும், அந்த கொட்டகைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட செயல்முறைகளுக்கும் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சிப்பில் விலங்கின் பெயர், இனம், நிறம், பாலினம், வயது மற்றும் தடுப்பூசி செலுத்திய விபரத்துடன், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தனி அடையாள எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கும். இதன்மூலம், தங்களின் வளர்ப்பு பிராணிகள் எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள முடியும். இது குறித்து சென்னை மாநகராட்சியின் கால்நடைத்துறை அதிகாரி கூறுகையில், 'மைக்ரோசிப் திட்டம் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 6 கால்நடை மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவமனைகள், கால்நடை அறிவியல் பல்கலை மற்றும் தனியார் கால்நடை மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது,' என்றார். கடந்த 2024ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, சென்னையில் மட்டும் 1.8 லட்சம் தெருநாய்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

graphix
பிப் 01, 2025 07:15

முதலில் விலங்குகளுக்கு பின்பு மனிதர்களுக்கு ....... JUST A NUMBER.


Mani . V
பிப் 01, 2025 06:06

இதில் எவ்வளவு கோடியை ஆட்டையைப் போடப் போறாங்களோ


Bhaskaran
பிப் 01, 2025 05:32

முதலில் தெருநாய்களை ஒழிக்க முயற்சி செய்யுங்கள் அல்லது பிடிக்கப்படும் தெருநாய்களை விலிங்கு நல்ல ஆர்வலர்கள் வளர்க்கணும்னு சட்டம் போடுங்கள் நேற்று காலை நடைப்பயிற்சி செய்யும் பொது திருவான்மியூர் கோவில் அருகில் ஏகப்பட்ட நாய்கள் மற்றும் மாடுகள் சாலையில் திரிகின்றன மாநகராட்சிக்கு இதெல்லாம் தெரியாத


Barakat Ali
ஜன 31, 2025 14:50

இதுங்க ஒரு முயற்சியிலேயே மூணு நாலு போட்டுத் தள்ளுதுங்க .... சிப்பு பொறுத்துனாலும் கப்பு அடிக்கும் ...


Kasimani Baskaran
ஜன 31, 2025 13:40

ஆதார் அட்டை கொடுத்து கட்சியில் சேர்க்கப்போகிறார்களா?


P.S.KUMARAPPA
ஜன 31, 2025 13:27

முதலில் தெரு நாய்களை ஒழியுங்கள் . எங்காவது பிடித்து கொண்டு போய் விலங்கையியல் ஆர்வலர்கள் வளர்க்கலாம் , அதை விட்டு தெருவில் தெரிவதால் எளிய ஏழை மக்கள்தான் பாதிக்கின்றனர். வசதி படைத்தவர்கள் கார்களில் கண்ணாடி மூடிக்கொண்டு செல்வதால் எளிய மக்களின் கஷடம் தெரிவததில்லை. மக்கள் ஜனத்தொகைக்கு சமமாக நாய்கள் ஜனத்தொகை உள்ளது தமிழகத்தில்.


C G MAGESH
ஜன 31, 2025 12:54

இதற்கு எத்தனை ஆயிரம் கோடி


Anbuselvan
ஜன 31, 2025 12:50

மைக்ரோ சிப் பொருத்தினால் விலங்குகள் கொடுமை படுத்தப்படும் என விலங்கு காக்கும் ஆர்வலர்கள் இந்த தீர்மானத்தை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்றாலும் ஆச்சர்ய படுத்துவதற்கு இல்லை.


N.Purushothaman
ஜன 31, 2025 12:29

மொதல்ல திருட்டு திராவிடனுங்களுக்கு அதை பொறுத்துங்க ....ரொம்பவும் தான் ஆட்டம் ஆடிக்கிட்டு இருக்கானுங்க ....


Kanns
ஜன 31, 2025 12:28

Catch All these Animals& their Owners-Feeders-Animal Rights Activists And Punish them


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை