பொதுக்குழு கூட்டம்
கோவை: கோவை மாவட்ட அயர்ன் அண்ட் ஹார்டுவேர் மெர்சன்ட் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம், காந்திபுரத்தில் உள்ள ஓட்டலில் நடந்தது. சங்க இணைச் செயலாளர் வெங்கடேஷ் வரவேற்றார். பொருளாளர் தேனப்பன் ஆண்டறிக்கை வாசித்தார். தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். 2011- 2014 ஆண்டுக்கான சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் தேனப்பன், இணை பொருளாளர் சிவகுமார், செயலாளர் சுதாகர், இணைச் செயலாளர்கள் சத்ய நாராயணன், வெங்கடேஷன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.செல்வபுரம், என்.எஸ். கே., ரோடு பகுதியை சேர்ந்த முதலாமாண்டு இன்ஜினியரிங் கல்லூரி மாணவி சுகன்யாஜோதிக்கு, கல்வி உதவித் தொகை 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன.