உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வினருடன் பழகுங்கள்: பா.ஜ.,வினருக்கு நட்டா டிப்ஸ்

அ.தி.மு.க.,வினருடன் பழகுங்கள்: பா.ஜ.,வினருக்கு நட்டா டிப்ஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:அ.தி.மு.க.,வினருடன் நெருங்கி பழகி, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி உறவை பலப்படுத்துமாறு, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவுரை வழங்கியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் தமிழக பா.ஜ., மையக்குழு கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்தில் நட்டா பேசியுள்ளதாவது:தமிழகத்தில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியை மக்கள் விரும்புகின்றனர். தி.மு.க., அரசு, ஊழல், சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்ப, அ.தி.மு.க.,வை பா.ஜ., மிரட்டி கூட்டணியில் சேர்த்து இருப்பதாக பொய் பிரசாரம் செய்கிறது; இதை முறியடிக்க வேண்டும். அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் நெருங்கிப் பழகி, இரு கட்சிகளின் கூட்டணி உறவை, நீங்கள் பலப்படுத்த வேண்டும். நட்புறவுடன் பழக வேண்டும். தேவையற்ற கருத்துகளை, பா.ஜ.,வினர் பொதுவெளியில் தெரிவிக்க கூடாது. வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஒருங்கிணைந்து களப் பணியாற்றி, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைக்க வேண்டும். மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை வீழ்த்த வேண்டும். அதிகளவில் பா.ஜ., வேட்பாளர்களை வெற்றி பெற செய்து, சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு நட்டா பேசியுள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

kalyan
மே 05, 2025 16:58

பாராளுமன்ற தேர்தலின் போதே கூட்டணி அமைத்து வேண்டுமானால் முருகனையோ நாயினாரையோ பிஜேபி யின் தமிழ்நாட்டின் தலைவராக நியமித்து, அண்ணாமலையை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பியிருக்க வேண்டும் . அப்போது கூட்டணியின் ஓட்டுக்கள் சிதறாமல் 10-12 இடங்களாவது மோடிக்கு கிடைத்திருக்கும் . இப்போதும் ஒன்றும் வீண் போகவில்லை . அதிமுகவுக்கு ஜெயிக்க வேண்டிய அளவில் அவர்களது வாக்காளர்களுக்கு போட்டியிட தொகுதிகளைக் கொடுத்தால் பிஜேபி தொண்டர்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். அதுவே பிஜேபி யின் வாக்காளர்களை அதிக தொகுதிகளில் நிற்க வைத்தால் அதிமுக தொண்டர்கள் வாக்களிக்க மாட்டார்கள் . மாற்று கட்சிகளான சீமான் கட்சி விஜய் கட்சி என திமுகவுக்கு எதிரான வாக்குகளை அளித்து வாக்குகளை பிரித்து விடுவார்கள் . பிறகென்ன மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தாலும் வரும் . கூட்டணி தமிழக தேர்தலில் அதிமுகவை வலுப்படுத்தவே உபயோகமாகும் . கூட்டணி பிஜேபி ஆட்சியை பிடிப்பதற்காக உதவாது என்று தில்லி புரிந்து கொண்டால் சரி


அப்பாவி
மே 04, 2025 20:11

நல்லா பழகுங்கள். போகும்போது நிறைய உமி கொண்டு போகணும். அவிங்களோட ஓட்டுப் பொரியை ஊதி, ஊதி சாப்புடணும்.


shanmugam subramanian
மே 04, 2025 13:14

வாங்க பழகலாம் வரும் தேர்தலுக்கு வாரியணைக்கலாம் வாக்காளர்களை வந்தே சேரட்டும் வாக்குகள் வெற்றிக்கு வழிவகை செய்யட்டும்.


Sundaresan S
மே 04, 2025 12:23

கோயம்புத்தூர் தேர்தல் தோல்வி எக்காலத்தாலும் மறக்கமுடியாது. முதுகில் குத்திய அதிமுக.


vetrivel iyengaar
மே 04, 2025 10:55

சிவாஜி பட சாலமன் பாப்பையா அங்கவை சங்கவை காமெடி தான் நினைவுக்கு வருது வாங்க பழகலாம் எல்லாம் காசு ...பணம் தான் ....கொஞ்சம் பழகலாம் .....ஆனா நட்டா டிப்ஸ் அதைவிட கேவலமா இருப்பது தான் இன்னும் காமெடி


vetrivel iyengaar
மே 04, 2025 10:52

அதிகாரத்துக்காக பதவி வெறிக்காக எல்லா அசிங்கத்தையும் செய்யுமாறு ஒரு கட்சி தலைவரே சொல்லும் கேவலத்த பார்க்கிறீர்களா மக்களே இவனுங்க .....ஊழலை எதிர்க்கபோறானுங்களாம்


Sundar R
மே 04, 2025 10:33

தமிழகமெங்கும், ஏற்கனவே நிறைய ஊர்களில் பாஜகவினரும், அதிமுகவினரும் ஒன்றாகத் தான் அமர்ந்திருக்கிறார்கள். நிற்கிறார்கள். நடந்து செல்கிறார்கள். பெருமதிப்புக்குரிய நட்டா அவர்கள் சொல்வது தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இதுபோன்று பாஜகவினரும், அதிமுகவினரும் ஒன்றாக இருக்க வேண்டும். செல்ல வேண்டும். செயல்பட வேண்டும் என்பது தான். தேர் என்ற கூட்டணி வீதியில் மக்களால் இழுக்கப்பட்டு, தெருமுனைக்கு வந்து விட்டது. இப்போது தேர் வலதுபுறம் திரும்ப வேண்டும். அதற்கு, மரத்தாலான ஒரு. WOODEN பிளாக் கொண்டு, முட்டுக்கொடுத்தால், அந்த தேர் வலதுபுறம் திரும்பும். அந்த முட்டுக் கொடுக்கும் பணியை பெருமதிப்புக்குரிய நட்டா அவர்கள் செய்திருக்கிறார்கள். அவர் இந்த பணியை செய்யாவிட்டால், கூட்டணி என்ற தேர் திசை தடுமாறி ஓடும். அதைத் தவிர்க்க, பாஜகவுக்கும், அதிமுகவிற்கும் பயன்படுமாறு ஒரு நற்பணியை செய்த பெருமதிப்புக்குரிய நட்டாஜி அவர்களுக்கு நன்றி.


மோகனசுந்தரம் லண்டன்
மே 04, 2025 07:57

இந்தக் கூறு கெட்டவனுங்களுக்காக எதற்கு அண்ணாமலைக்காக இந்த கட்சியில் வந்தோம் என்று யோசிக்க வேண்டியது உள்ளது.


முருகன்
மே 04, 2025 07:50

இவர்களுடன் கூட்டணி வைத்தால் ஊழல் செய்தாது அனைத்தும் புனிதமாக மாறிவிடும்


ssh
மே 04, 2025 07:32

வானதி மற்றும் நயினாருக்காக பாஜக இவ்வளவு கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை