உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரவு நேரங்களில் பெண் வேடமணிந்து வழிப்பறியில் ஈடுபட்டவர் உட்பட மூவர் கைது

இரவு நேரங்களில் பெண் வேடமணிந்து வழிப்பறியில் ஈடுபட்டவர் உட்பட மூவர் கைது

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே, இரவு நேரங்களில், பெண் வேடமணிந்து லாரி டிரைவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை, தனிப் படை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா மணலூரைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் முப்பிடாதி,37. டிரைவர். இவர், கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் இருந்து லாரியில் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்னை வந்தார். அன்று அதிகாலை 3.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் மாதா கோவில் அருகே வந்த போது, டார்ச் லைட் அடித்து, பெண் ஒருவர் சாலையில் நின்று லாரியை நிறுத்தினார். இதையடுத்து, முப்பிடாதி லாரியை நிறுத்தி விட்டு, பெண்ணுடன் மறைவான இடத்திற்குச் சென்றார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த 4 பேர், முப்பிடாதியைத் தாக்கி, 2 மொபைல்போன்கள், 1,000 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினர். காயமடைந்த அவர், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எடைக்கல் போலீசார், வழக்குப் பதிந்தனர். திருட்டு கும்பலைப் பிடிக்க, உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், ஏட்டுக்கள் ராதாகிருஷ்ணன், சுந்தர், சிவா, ஆருண், தேவேந்திரன், சக்திவேல் ஆகி@யாரைக் கொண்ட தனிப் படை அமைக்கப்பட்டது. நேற்று அதிகாலை, தனிப் படை போலீசார் ஆசனூர் சிப்காட் பகுதியில் கண்காணித்தனர். அப்போது, சந்தேகப்படும் படியாக நின்ற 3 பேரைப் பிடித்து, விசாரணை செய்தனர். அவர்கள், உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் மாரியம்மன் கோவில் தெரு மாயூப் மகன் அமீன், 22, ஆசனூர் ஆத்திமரத்து தெரு கோதண்டபாணி மகன் செந்தில் ராஜா,30, காதர்கான் மகன் ரகுமான்,28, என தெரிந்தது.விசாரணையில், அதே பகுதி முருகவேல் மகன் சிலம்பரசனுடன் சேர்ந்து, இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து, டிரைவரை தாக்கி கொள்ளையடித்தது தெரிந்தது. இந்தக் கும்பலுக்கு, அமீன் தலைவனாக இருந்துள்ளான். ரகுமான் பெண் வேடமணிந்து, சாலையில் நின்று டார்ச் லைட் அடித்து லாரியை நிறுத்துவான். மற்ற மூவரும், மறைவாக இருந்து கொண்டு டிரைவர்களைத் தாக்கி, இருப்பதைப் பறிப்பது தெரிந்தது. எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து அமீன், செந்தில் ராஜா, ரகுமானை கைது செய்து, கள்ளக்குறிச்சி மாஜிஸ்திரேட் (பொறுப்பு) முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சிலம்பரசனை தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து 2 மொபைல்போன்கள், ஒரு கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை