உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லட்டில் மாட்டுக்கொழுப்பு; கடும் நடவடிக்கை எடுக்க ஜீயர் சுவாமிகள் வலியுறுத்தல்

லட்டில் மாட்டுக்கொழுப்பு; கடும் நடவடிக்கை எடுக்க ஜீயர் சுவாமிகள் வலியுறுத்தல்

ஸ்ரீவில்லிபுத்துார்: 'திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு கலந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள் தெரிவித்துள்ளதாவது:திருப்பதி லட்டில், மாட்டு கொழுப்பு கலந்த விவகாரத்தால் பக்தர்களின் மனம் மிகவும் புண்பட்டது. இந்த தவறு செய்தவர்களை, வன்மையாக கண்டித்து அவர்களது ஒப்பந்தத்தை ரத்து செய்து, தண்டனையை மத்திய அரசு வழங்க வேண்டும்.திருப்பதி ஏழுமலையான் கோவிலை பற்றியும், ஹிந்து கலாசாரத்தைப் பற்றியும் சில கரும்புள்ளிகள், சமூக வலைதளங்களில் தவறாக பகிர்ந்து வருகின்றனர். அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றினால் எந்த பிரச்னையும் வராது.மத்திய, மாநில அரசுகள், எந்த மதத்தையும், யாரும் இழிவாக பேசினாலும் கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.இவ்வாறு ஜீயர் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கிஜன்
செப் 27, 2024 01:57

அப்புறம் என்ன ....


Ramesh Sargam
செப் 26, 2024 20:33

சம்பந்தப்பட்டவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கத்தவறினாலும், கடவுள் நேரம் பார்த்து தவறு செய்தவர்களை தண்டிப்பார். தெய்வம் நின்று கொல்லும் . பொறுமை கடைபிடிப்போம்.


thonipuramVijay
செப் 26, 2024 20:31

புரியவில்லை ... மாட்டு பாலில் இருந்துதான் நெய் எடுக்கப்படுகிறது ....பிறகு மாட்டு கொழுப்பு மட்டும் எப்படி விதிவிலக்காகும் ?


புதிய வீடியோ