கிரிஷ் சோடங்கர் அக்., 13ல் ஆலோசனை
தி.மு.க., கூட்டணியில், பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர், வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்பதுடன், ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். தி.மு.க., கூடுதல் தொகுதிகளை கொடுக்காவிட்டால், விஜய் தலைமையிலான த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் காங்கிரசில் பெரும்பாலானோர் பேசி வருகின்றனர். இது குறித்து ஆலோசிக்க, காங்., செயற்குழுக் கூட்டம், கடந்த மாதம் 28ம் தேதி நடக்க இருந்தது. ஆனால், திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் 13ம் தேதி, சென்னையில் காங்., தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்க உள்ளது. அதில் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில், வரும் 14ம் தேதி துவங்கும் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் செயல்பாடுகள் அமையும் என கூறப்படுகிறது.