உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குழந்தை திருமணங்களால் கர்ப்பமாகும் சிறுமியர்

குழந்தை திருமணங்களால் கர்ப்பமாகும் சிறுமியர்

கெலமங்கலம்: குழந்தை திருமணங்களால் கர்ப்படையும் சிறுமியர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புகார் செய்யாமல் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதால், கடந்த, 3 மாதங்களில், 6 வழக்குகளுக்கு புகார் செய்யப்படவில்லை.ஆந்திரா, கர்நாடகா என, இரு மாநில எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மலை கிராமங்கள் அதிகம். அதனால் கல்வியறிவில் பின்தங்கிய மக்கள் அதிகமாக உள்ளனர். வனத்தையொட்டிய மலை கிராமங்கள் மட்டுமின்றி, பல்வேறு குக்கிரமங்களில், 18 வயது பூர்த்தியாகும் முன்பே, திருமணம் செய்து வைக்கும் நடைமுறை அதிகமாக உள்ளது. படிக்கும் போதே இளைஞர்களின் ஆசைவார்த்தையை நம்பி, வீட்டிலிருந்து ஓடி, திருமணம் செய்து கொள்ளும் மாணவியரும் அதிகம். மாவட்டத்தில் கடந்த, 2018 ஏப்., முதல், 2019 மார்ச் வரை, 19 வயதிற்கு உட்பட்ட, 242 பேர் குழந்தை பெற்றுள்ளனர். 2019 - 20ல், 473 பேரும், 2020 - 21ல், 627 பேரும், 2021 - 22ல், 667 பேரும், 22 - 23ல், 345 பேரும், 23 - 24ம் ஆண்டில், 165 பேரும் என மொத்தம், 2,519 பேர் டீன் ஏஜில் கர்ப்பமடைந்துள்ளனர். இதில், 80 சதவீதத்திற்கும் மேல், குழந்தை திருமணம் செய்து கொண்டவர்கள்.காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் அதிகபட்சமாக, 529 பேர் குழந்தை பெற்றுள்ளனர். கடந்த, 2020 - 21 மற்றும் 2021 - 2022ம் ஆண்டு என, கொரோனா காலக்கட்டத்தில் தான் அதிகபட்சமாக, 1,294 இளம் பருவ திருமணங்கள் நடந்து, சிறுமியர் கர்ப்பமடைந்துள்ளனர். குழந்தை திருமணம் தற்போது வரை, தொடர் கதையாக தான் உள்ளன. கெலமங்கலம் ஒன்றியத்திற்குள் மொத்தம், 28 பஞ்.,க்கள் மற்றும் தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் என, 2 டவுன் பஞ்.,க்கள் உள்ளன. அங்கு கடந்த, 3 மாதங்களில் மட்டும், 18 வயது பூர்த்தியடையாத சிறுமியர், 5 பேர் கர்ப்பமாகி, ஓசூர் மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளனர்.

கர்ப்பமான சிறுமியர் விபரம்

ராயக்கோட்டை அருகே வசிக்கும் திருமணமான, 15 மற்றும் 14 வயது சிறுமியர், உள்ளுகுறுக்கை அருகே வசிக்கும், 13 வயது திருமணமான சிறுமி, பெட்டமுகிலாளம் அருகே வசிக்கும் திருமணமாகாத, 12 வயது சிறுமி, நாகமங்கலம் அருகே வசிக்கும் திருமணமாகாத, 15 வயது சிறுமி மற்றும் திருமணமான, 15 வயது சிறுமி என, 6 பேர், கடந்த, 3 மாதங்களில் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளுக்கு, அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சிறுமிகள் குறித்து மருத்துவமனையில் ஏ.ஆர்., என்டரி செய்து, சமூக நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. சிறுமியரின் கர்ப்பத்திற்கு காரணமான நபர்கள் மீது, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் ஸ்டேஷனில் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறையினர் அலட்சியம் காட்டுவதால், குழந்தை திருமணம் செய்வோர், போக்சோ வழக்குகளில் சிக்காமல் தப்பி வருகின்றனர்.குறிப்பாக, ராயக்கோட்டை அருகே, குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டுள்ள, 14 வயது சிறுமி, 2வது குழந்தைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இப்படி அதிகாரிகள் அலட்சியத்தால் குழந்தை திருமணங்கள் தொடர் கதையாகுகின்றன. மேலும், சிறு வயதில் கல்வி கற்க முடியாமல், ஒரு குழந்தைக்கு தாயாகி வருவதால், அவரது மனம் மற்றும் உடல்நிலை பாதிக்கிறது. ஒரு சிறுமி கர்ப்பமடைவது வெளியே தெரிந்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு நிதியுதவியில் சிக்கல்

சிறுமியர் கர்ப்பமடையும் சம்பவத்தில், போக்சோ வழக்கு பதிந்து, போலீசார் நடவடிக்கை எடுத்தால், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் நிதியுதவி கிடைக்கும். ஆனால் வழக்குப்பதிய சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், பாதிக்கப்படும் சிறுமியருக்கு, அரசு நிதியுதவி கிடைப்பதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

என்றும் இந்தியன்
ஜூன் 07, 2025 19:20

திருமணம் கர்ப்பம் இதில் என்ன தவறு?????கொஞ்சம் வயது குறைவாய் இருந்தால் என்ன??


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 07, 2025 17:51

காரணம் யார் ?? மர்ம மனிதர்கள்தானே ?? உருவ வழிபாட்டாளர்களா இருந்தா பாய்ஞ்சு போயி புடிச்சிருப்பாங்க ....


venugopal s
ஜூன் 07, 2025 12:49

பால்ய விவாகம் என்ற குழந்தை திருமணத்திற்கு அரசனே உதாரணமாக இருந்தால் மக்களும் அப்படித்தானே இருப்பார்கள்! அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி!


Svs Yaadum oore
ஜூன் 07, 2025 11:39

13 வயது சிறுமி கர்ப்பம்.... விரக்தியில் தாய், தந்தை தற்கொலை...திண்டுக்கல் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில் 13 வயது சிறுமி கர்ப்பம் ....பெற்றோர் தரப்பில் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது...சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பதால் பள்ளிக்கும் செல்ல முடியவில்லை. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் தாய் தனது வீட்டிலேயே தூக்கதூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிறகு தந்தையும் தற்கொலை ...


Svs Yaadum oore
ஜூன் 07, 2025 11:28

பஸ் நிலையங்களில், ரயில்களில், ரயில் நிலையங்களில், பார்க்-பீச்சுகளில் இந்த இளசுகள் அடிக்கும் கொட்டம் அசிங்கமோ அசிங்கம். .....மனைவி இணைவி துணைவி பாரம்பரியம் ......காதல் திருமணங்கள் ஜாதிகளை ஒழிக்கும் என்று இன்னொரு கும்பல் ..திருமணம் தாண்டிய உறவு என்று பெயர் வைத்து கள்ள காதலை ஆதரிக்கும் மற்றொரு கும்பல் ...எப்படி சாராயம் வீட்டில் அம்மா எதிரில் குடித்தால் அது தற்கால நாகரிகம் என்று சொல்லும் சினிமா கும்பல் ...இந்த அசிங்கத்தை நீயா நானா என்று விவாதம் செட் அப் செய்து தொலை காட்சி கும்பல் ...ஆனால் இவர்களுக்கு வோட்டு போடுவது யார்?? ...அவனவன் குடும்பத்தில் அடி வாங்கினால்தான் அவனவனுக்கு உறைக்கும் ....


தத்வமசி
ஜூன் 07, 2025 10:28

ஐயா, சட்டம் எவ்வளவு தான் சொன்னாலும் உடல் வளர்ச்சி, உடலில் மாறுதல்கள் எல்லாம் எப்படி விட்டு வைக்கும் ? திருமணம் செய்து கொள்ள வேண்டாம். அது சட்டம். பஸ் நிலையங்களில், ரயில்களில், ரயில் நிலையங்களில், பார்க்-பீச்சுகளில் இந்த இளசுகள் அடிக்கும் கொட்டம் அசிங்கமோ அசிங்கம். பெண்ணைப் பெற்றவர்களின் வயிற்றில் பயம் மட்டும் தான் இருக்கிறது. ஊசி இடம் கொடுத்தல் தான் நூல் செல்லும் என்கிற பழமொழி உண்டு. ஆனால் உடலும் உணர்ச்சியும் அமைதியாக இருப்பதில்லையே. குழந்தை திருமணத்தை சட்டம் நிறுத்தலாம், உணர்சிகளை சட்டம் போட்டு தடுக்க இயலாது.


தமிழ்வேள்
ஜூன் 07, 2025 10:03

திருட்டு திராவிட கும்பல் இங்கு திணித்து வைத்துள்ள இணைவி துணைவி பண்பாடு, வீதிக்கொரு கீப்பு ஊருக்கு ஒரு சைடு செட்டப் என்ற கேவலத்தை வாழ்க்கை முறையாக பரப்புரை செய்யும் உருப்படாத தமிழ் திரையுலகம் போன்றவை உள்ள வரை குழந்தை திருமணம் இருக்கத்தான் செய்யும்.. மூர்க்க மார்க்க கும்பலின் லவ் ஜிஹாத் ஐ மறைமுகமாக ஆதரித்து உதவி செய்யும் திராவிட இயக்கம் விசிக கும்பலும் குழந்தை திருமணங்களுக்கு பெரும் காரணம் என்பதையும் மறுக்க முடியாது


KRISHNAN R
ஜூன் 07, 2025 09:37

கொடுமை. நடவடிக்கை எடுத்தா.... அதை விட கொடுமை.. இளைஞன்,... ஜெயிலுக்கு..போயிடு வான்.... அந்த பெண், மற்றும் குழந்தை.. இரண்டும் தனி மரமாகும்..


Seshan Thirumaliruncholai
ஜூன் 07, 2025 09:19

சிறிய வயதில் திருமணம் தற்போதைய காலத்தில் மிகவும் ஆபத்தானது. நிம்மதியில்லா வாழ்வு. காரணம் தற்போது வெளியுலகம் கெட்டுவிட்டது. பிறந்த குழந்தையிலிருந்து நூறு வயது உள்ளவர்கள் வரை எல்லோரும் தொலைக்காட்சி பேட்டி கைபேசியில்தான் முழு நேரமும் செலவு செய்கின்றனர். மனம் அலைபாய்கிறது. தெரிந்தோ தெரியாமலோ தவறுசெய்தாலும் மீள வாழமுடியும் என்ற தைரியம். முந்தைய நூற்றாண்டில் நிறைய உற்றார் உறவினர்கள் வந்து போய்க்கொண்டு இருந்தார்கள். அதனால் அப்போது சிறு வயது விவாகங்கள் எந்த ஒரு தீங்கை ஏற்படுத்தவில்லை.


Padmasridharan
ஜூன் 07, 2025 08:06

அங்க மட்டுமில்ல சாமி, சென்னையில் கூட ஒரு குழந்தையை பாலியல் தொல்லை செய்த கல்லூரி மாணவனை பணம் வாங்கி வெளியில் விட்டுவைத்திருக்கின்றனர். காவல் நிலையத்தில் வேலை செய்பவர்கள் நிறைய பேர் பணத்தை வாங்கி பஞ்சாயத்து என்ற பெயரில், குற்றங்களை மறைத்து புது குற்றவாளிகளை உருவாக்கி கொண்டிருக்கின்றனர். அரசு படிக்கணும்னு சொல்லி இலவச உணவு போட்டு படிச்சதுக்கப்புறம் சம்பளத்தை மதுக்கடையில குடிக்க வாங்கிடறாங்க. திருமண வயது அதிகமானதனால காமத்த காதல் என்ற பெயரில் ஏமாத்த தொடங்கிட்டாங்க. காவல்துறை சிறப்பா இருந்தா நிறைய குற்றங்களை தடுக்கலாம். இலஞ்சம் வாங்கறது குற்றம்னு ஒரு சட்டத்தையே இவங்கதான் மொதல்ல உடைச்சு நிறைய குற்றங்களுக்கு அடிக்கல் நாட்டுறாங்க. அவங்க வீட்டு வம்சத்துக்கு கர்மா பாவப் பலன்களை சேர்த்துவெச்சிட்டு இருக்காங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை