உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடல் நடுவில் கண்ணாடிப்பாலம்: கன்னியாகுமரிக்கு இன்னொரு சிறப்பு!

கடல் நடுவில் கண்ணாடிப்பாலம்: கன்னியாகுமரிக்கு இன்னொரு சிறப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கன்னியாகுமரி: இந்தியாவிலேயே முதல் முறையாக கடலின் நடுவில் அமைக்கப்பட்ட கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (டிச.30) திறந்து வைத்தார்.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டு 25ஆண்டுகள் நிறைவு பெறுசிறது. இதன் வெள்ளி விழா ஜன.1 ம் தேதி தொடங்குகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tl29wxb5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 அதன் ஒரு பகுதியாக விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் வகையில் கண்ணாடி இழை பாலம் அமைக்கும் பணிகள் ஓராண்டாக நடைபெற்று வந்தது. இதற்கு முன்னதாக இவ்விரு பகுதிகளுக்கும் செல்ல படகு போக்குவரத்து மட்டுமே நடைமுறையில் இருந்தது. கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று (டிச.30) கன்னியாகுமரி சென்ற முதல்வர் ஸ்டாலின் பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் பாலத்தில் நடந்து சென்ற அவர், திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டு மரியாதை செலுத்தினார். இந் நிகழ்வின் போது துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ள கண்ணாடி இழை பாலத்தின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இப்போது காணலாம். * 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பாலம் உருவாக்கப்பட்டு உள்ளது. * பாலத்தின் நீளம் 77 மீட்டர், அகலம் 10 மீட்டர். * விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல இந்த பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்லலாம். * கண்ணாடி இழை பாலம் முடிவடையும் இடத்தில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவு. • இந்தியாவிலேயே முதல் முறையாக கடலின் நடுவில் கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டு உள்ளது இங்கு மட்டுமே. * பாலத்தில் நடந்து செல்லும் போது கால்களுக்கு கீழே கடல் தண்ணீர் செல்வதை நேரிடையாகவே காணலாம். *விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட இனி பாலத்தில் நடந்து செல்லலாம். படகு பயணம் அவசியமாகாது,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

sankar
டிச 31, 2024 14:50

கமிஷன்


orange தமிழன்
டிச 31, 2024 09:45

அருமை... தமிழக அரசுக்கு வாழ்த்துகள்..


Kasimani Baskaran
டிச 31, 2024 08:13

கின்னஸ் புத்தகத்தில் சாதனையாக பதிவு செய்யலாம்.


பாமரன்
டிச 31, 2024 07:50

பகோடாஸ் அழுவாச்சி சகிக்கல...


ghee
டிச 31, 2024 10:06

அப்போ அப்படியா ஓடி போயிடு


ghee
டிச 31, 2024 06:43

புருடா வைகுண்டம். 8.30 crores for 100 programs ...not each....and Patel statue is 3000 crores...you are crazy and stupid guy


natarajan
டிச 31, 2024 06:18

தப்பி தவறி போயிறாதீங்க.ஊழல் பேர்வழிகள் உடையிற பாலமா கட்டிருப்பானுங்க.ஆயுசு 5 மாசம்


Mani . V
டிச 31, 2024 05:51

இந்தப் பாலமாவது கொஞ்ச நாள் நிலைத்து இருக்க அந்த கருணாநிதி ஸாரி ஆண்டவன் அருள்புரிய வேண்டும். அல்ப ஆயுளில் எதுவும் செய்து கொள்ளக்கூடாது.


Oru Indiyan
டிச 30, 2024 22:21

விவேகானந்தர் நினைவகத்தை பார்த்தாரா முதல்வரும் துணை முதல்வரும்..


Pandianpillai Pandi
டிச 30, 2024 21:45

இது தான் தி மு க. ஜனநாயகத்தின் ஆட்சி . ஆன்மீகத்தின் அடையாளம் விவேகானந்தர் தமிழர்கள் வாழ்வியலின் அடையாளம் திருவள்ளுவர். இதன் மூலம் தமிழ்நாடு பற்றிய புரிதலை சொல்லாமல் செய்து காட்டியிருக்கிறார் கலைஞர். தமிழர்களுக்கு அரனாக விளங்கும் நமது முதலமைச்சர் கண்ணாடி போன்றவர்தான் . எதிரிக்கு எதிரி நல்லவர்களுக்கு நல்லவர்.


V வைகுண்டேஸ்வரன்
டிச 30, 2024 20:22

சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த எவனையும் கேட்க வேண்டாம். அரசே பார்த்து செய்யும். உதாரணம் : 3500 கோடியில் பட்டேல் சிலை யாரும் கேட்காமல் வைக்கவில்லையா? ஒரு நாள் மங்கி பாத்துக்கு ரூ. 8.3 கோடி வீதம் மாசாமாசம் செலவாகிறது என்று RTI, அதாவது தகவல் உரிமைச் சட்டம் மூலம் வெளி வந்த உண்மை. இப்போ பேசுங்க


புதிய வீடியோ