உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!

குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!

ஊத்துக்குளி: ஊத்துக்குளி டவுனில் அ.தி.மு.க., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் குலுக்கல் முறையில் சிறப்பு பரிசு வழங்கப்படும் என கட்சியினர் அறிவித்துள்ளனர். கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக இந்த நூதன டெக்னிக்கை கட்சியினர் கையில் எடுத்துள்ளனர்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.,வினர் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று தேனி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பங்கேற்றார். அந்த வகையில், வரும் மார்ச் 5ம் தேதி, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி டவுனில் மாலை 5.30 மணிக்கு பொதுக்கூட்டத்தை நடத்த அ.தி.மு.க.,வினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். கூட்டத்தில் எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பு உரை ஆற்ற உள்ளனர். இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என அ.தி.மு.க., உள்ளூர் கட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். குலுக்கல் முறையில் 3 நபர்களுக்கு தங்க நாணயமும், 300 நபர்களுக்கு வீட்டு உபயோக பொருட்களான மிக்சி, குக்கர், கிரைண்டர், பீரோ, பேன், சில்வர் பாத்திரங்கள் வழங்கப்படும் என்று நோட்டீஸ் ஊர் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே திருப்பூர் பகுதியில் நடந்த ஒரு அ.தி.மு.க., கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சேர் இலவசமாக வழங்கப்பட்டது. கூட்டத்தில் தாங்கள் அமர்ந்திருக்கும் சேரை தாங்களே வீட்டுக்கு எடுத்துச் சென்று விடலாம் என்று அறிவித்து நூதனமாக கூட்டத்துக்கு ஆள் சேர்த்திருந்தனர். இப்போதும் அதே வழியை பின்பற்றி ஆள் சேர்க்க நோட்டீஸ் அச்சிட்டு உள்ளனர். அ.தி.மு.க.,வினரின் இந்த நூதன டெக்னிக், இணையத்தில் கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Loganathan Balakrishnan
மார் 03, 2025 16:44

அது முடியாது அதை தடுக்கத்தான் ஒரு கோமாளி தனியா ஒரு கட்சி ஆரம்பிச்சி இருக்கான் TVK


ஆரூர் ரங்
மார் 03, 2025 16:34

எம்ஜியார், ஜெயாவைப் பார்க்க 12 மணிநேரம் கூட சாலைகளில் காத்துக் கொண்டிருந்த காலம் நினைவுக்கு வருகிறது.


Rajathi Rajan
மார் 03, 2025 19:36

அதை எல்லாம் பார்த்த நீ இன்னுமா உயிருடன் இருக்க> ராங் ரெங்கம்மா,, உனக்கு ஊதணும் சங்கம்மா


Kovandakurichy Govindaraj
மார் 03, 2025 16:22

புரட்சித்தலைவர் , புரட்சித்தலைவி முகத்தை காட்டி ஓட்டு வாங்கிய கட்சி இன்று எடப்பாடி பழனி என்கிற மக்கள் ஆதரவு அறவே இல்லாத ஒருத்தரால் அழிவு பாதையை நோக்கி செல்கிறது .


Subburamu Krishnasamy
மார் 03, 2025 14:42

Dravidian parties strong view about Tamizhagam peoples is as follows We are filtered idiots, lazi peoples, longing for freebies, do anything for money, liquor addicts etc


தமிழன்
மார் 03, 2025 14:37

எப்படி இருந்த நான் இப்படி நாசமா போயிட்டேன் ஆள் இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்தறே?? கோவை சரவணம்பட்டி காவல் நிலையம் மிக அருகில் சென்ற புதன்கிழமை மாலை அதிமுக அழிந்துபோன திருட்டு முன்னேற்ற கழகம் மேடை பேச்சுக்கு மாலையில் வெறும் சேர்களை பார்த்து எவனோ மேடையில் தனக்குத்தானே ஏதோ உளறிக் கொண்டிருந்தான் பாவம் அவனுக்கு என்ன கஷ்டமோ?? யாரு பெத்த பிள்ளையோ??


SIVAN
மார் 03, 2025 14:22

மக்களின் இலவசத்தின் மீதுள்ள ஆசையை அரசியல் வியாதிகள் அறுவடை செய்கிறார்கள். ரெண்டு ஆசை வாதிகளும் உருப்பட ஆளும் தேசிய கட்சி வந்தால் ஒழிய வேறு வழி இல்லை.


veeramani hariharan
மார் 03, 2025 15:56

Rightly said


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை