உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிக ஓட்டு பெற்றால் தங்க நாணயம் பரிசு

அதிக ஓட்டு பெற்றால் தங்க நாணயம் பரிசு

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்தின் எந்தத் தொகுதிக்கும் எதையும் செய்யவில்லை. கொள்ளையடிப்பதிலேயே தி.மு.க.,வினர் மும்முரமாக இருக்கின்றனர். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் என்ன திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினோமோ, அந்த திட்டங்கள் தான் இன்றளவிலும் நடைமுறையில் உள்ளன. கோஷ்டி பூசலால் தான், கட்சிக்கு ஓட்டு வங்கி குறைந்து கொண்டே வருகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாக வேண்டும் என்றால், அ.தி.மு.க., நிர்வாகிகள் கருத்து வேறுபாடுகளை மறந்து, பூத் கமிட்டிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். சட்டசபை தேர்தலில் அதிக ஓட்டுகளை பெற்றுத் தருபவர்களுக்கு, தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும். ஒவ்வொருவரும் கட்சியில் மற்றவர்களை அனு சரித்து செல்ல வேண்டும். - வேலுமணி, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை