வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நகை வியாபாரிகள் கொள்ளை அடிக்கிறாங்கனு தெரியுதுல்ல , அப்புறமும் ஏன் அந்த வ போய் வாங்கணும் யாரும் கைய புடிச்சு இழுக்கலேயே
இது சும்மா வெறும் டீ பிரேக் தான். இனி அடுத்து எகிறும்.
தங்கம் வெள்ளி நகைக்கடை வியாபாரம் ஒரு பகல் கொள்ளை.. இது எல்லோருக்கும் தெரிகிறது .. ஆனாலும் யாருமே இதற்கு எப்போதுமே போராட்டமே நடத்துவதில்லை ... நீதி நியாயம் சத்தியம் தர்மம் என்று என்னென்னமோ பேசும் எல்லா வாயும் இதற்கு மௌனம்தான் .. இந்த வியாபாரமே பெரிய மர்மமாக இருக்கிறது ...
இந்தியாவில் தங்கத்தின் சுத்தத்தின் அளவு மிகவும் குறைவு. செய்கூலி என்பதை கட்டாயம் தர வேண்டும். சேதாரம் என்பதை உலகுக்கு அறிமுகப் படுத்தியதே இந்திய வியாபாரிகள் தான். இந்த உலகை ஏமாற்றும் வேலையான சேதாரம் என்பது தங்கத்திற்கு எப்படி வரும் ? இதை கேட்க நாதியில்லை. நீதிமன்றம் என்பது இந்த விஷயத்தில் காணாமலே இருக்கிறது. தங்கத்தின் விலை குறைந்தால் செய்கூலி சேதாரம் மிகவும் அதிகமாகி விடும். சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் தயாராகி அங்கேயே விற்கப்படும் நகைகளுக்கு சேதாரம் இல்லை. இந்தியாவில் தங்கம் விற்பனை செய்யும் ஏதாவது ஒரு கடையில் ரெய்டு நடந்துள்ளதா பாருங்கள். நடக்காது. எல்லாம் பினாமிகள். யார் யாருக்கு பினாமிகள் என்றால் ? இந்தியாவில் அதிகாரத்தில் உள்ளவர்கள், கேள்வி கேட்கும் உரிமையில் உள்ளவர்கள் அனைவருக்கும் பினாமியாக இந்த நகை கடைகள் இருக்கும் போல. வெள்ளியின் நிலைமை கேட்கவே வேண்டாம். இப்போது ஒரு வெள்ளி பொருள் வாங்கினால் அதன் சுத்தம் சுமார் என்பதுக்கும் கீழே தான் உள்ளது. அதை மீண்டும் கடையில் போடுவதற்கு சென்றால் சுமார் முப்பது சதவிகிதம் தளுபடி செய்து விடுவார்கள். அப்போது எவ்வளவு வெள்ளி நாம் வாங்குகிறோம் என்றால் வெறும் ஐம்பது சதவிகிதம் வெள்ளி மட்டுமே வாங்குகிறோம். எவ்வளவு ஏமாற்று வேலை நகை கடைகளில் நடக்கிறது பாருங்கள். இதை இது வரை யாரும் எந்த நீதிமன்றமும் கேட்டதாக தெரியவில்லை.
சிங்கப்பூர் மலேசியா நாடுகளில் சேதாரம் என்று பில் போட்டால் அதற்குறிய சேதாரம் கையில் தந்து விடுவார்கள்
excellent post thathvamasi.appreciate.