உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 சரிவு; ஒரு சவரன் ரூ.70,040!

2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 சரிவு; ஒரு சவரன் ரூ.70,040!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (மே 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 சரிந்து, ஒரு சவரன் ரூ.70,040க்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 சரிந்துள்ளது.தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 30) தங்கம் கிராம் 8,980 ரூபாய்க்கும், சவரன் 71,840 ரூபாய்க்கும் விற்பனையானது. அன்று தங்கம் வாங்க உகந்த நாளாக கருதப்படும் அட்சய திரிதியை என்பதால், பலரும் நகைகள் வாங்கினர். நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு 205 ரூபாய் குறைந்து, 8,775 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,640 ரூபாய் சரிவடைந்து, 70,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று (மே 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 சரிந்து, ஒரு சவரன் ரூ.70,040க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.8,755க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 சரிந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி