உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலையில் குறைந்த தங்கம் மாலையில் ரூ.400 அதிகரிப்பு; சவரன் ரூ.96,000க்கு விற்பனை

காலையில் குறைந்த தங்கம் மாலையில் ரூ.400 அதிகரிப்பு; சவரன் ரூ.96,000க்கு விற்பனை

சென்னை: சென்னையில் இன்று (அக் 18) காலையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்து காணப்பட்ட நிலையில், மாலையில் ரூ.400 அதிகரித்துள்ளது. இதன்மூலம், ஒரு சவரன் ரூ.96,000க்கு விற்பனை ஆகிறது.சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கள் நிதி பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். எனவே, கடந்த ஒரு மாதமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நம் நாட்டில், அதன் விலை தினமும் உச்சத்தை எட்டி வருகிறது.தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 16) ஆபரண தங்கம் கிராம், 11,900 ரூபாய், சவரன், 95,200 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. வெள்ளி கிராம், 206 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (அக் 17) ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு, 300 ரூபாய் உயர்ந்து, 12,200 ரூபாய்க்கு விற்பனையானது.சவரனுக்கு அதிரடியாக, 2,400 ரூபாய் அதிகரித்து எப்போதும் இல்லாத வகையில், 97,600 ரூபாயாக உயர்ந்தது. இந்நிலையில் இன்று (அக் 18) காலை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2 ஆயிரம் சரிந்து ஒரு சவரன் ரூ.95,600க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.250 குறைந்து ஒரு கிராம் ரூ.11,950க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கடந்த சில தினங்களாக புதிய உச்சம் தொட்டு வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.2 ஆயிரம் சரிந்து நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது. இந்த சந்தோஷம் ஒரு நாளைக்கு கூட நிலைக்காத வகையில், மாலையில் தங்கம் விலை ரூ.400 அதிகரித்துள்ளது. இதன்மூலம், ஒரு சவரன் ரூ.96,000க்கு விற்பனை ஆகிறது. கிராம் ரூ.50 அதிகரித்து ரூ.12,000க்கு விற்பனையாகிறது. அதேபோல, வெள்ளி விலை இன்று காலை ரூ.13 குறைந்து ஒரு கிராம் ரூ.190க்கு விற்பனையானது. மாலையில் எந்தவித மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனையாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Prabhu Balasubramaniam
அக் 18, 2025 17:28

இது வீக்கம் அல்ல .... கட்டி


Raj
அக் 18, 2025 16:52

இது ஒரு ஏமாற்று வேலை.


R Dhasarathan
அக் 18, 2025 17:10

உண்மையை கூறுகிறீர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை