உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!

2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (மே 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025க்கு விற்பனை ஆகிறது.தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (மே 03), ஆபரண தங்கம் கிராம், 8,755 ரூபாய்க்கும், சவரன், 70,040 ரூபாய்க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை. நேற்று (மே 05) காலை தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 8,775 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 160 ரூபாய் உயர்ந்து, 70,200 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மாலை தங்கம் விலை திடீரென மேலும், கிராமுக்கு 125 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 8,900 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,000 ரூபாய் உயர்ந்து, 71,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (மே 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025க்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 06, 2025 17:41

தங்கம் விலை ஒரு லட்சத்தை எட்டினாலும எங்களுக்கு ஐ மீன் எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ( அண்ணன் தம்பிகள் அக்கா தங்கைகள் ) காரணம் நாங்கள் தங்கம் வாங்குவதை நிறுத்தி ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிவிட்டது.....அதற்கு பதில் வீட்டு மனை வாங்கி முதலீடு செய்ய முடிவு செய்து அதை நடைமுறை படுத்தி வருகிறோம்.....இனி எங்கள் பிள்ளைகளுக்கு நகைகளை போட்டு திருமணம் செய்வதை விட வீட்டு மனைகளை அவர்கள் பெயருக்கு எழுதி அவர்கள் நல்லபடி வாழ வகை செய்து வயதான காலத்தில் எந்த வித கவலைகள் இல்லாமல் நிம்மதியாக போய் சேரலாம்.... இந்த வழி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்ச்சிக்கலாமே....!!!


abdulrahim
மே 06, 2025 18:41

நூற்றுக்கு நூறு சதவிகிதம் உங்கள் வழி சரியான ஓன்று நண்பரே , தங்கத்தை வாங்குவதை மக்கள் குறைத்து விட்டால் தானாகவே தங்கம் விலை குறைந்து விடும் , அதேபோல மண்ணில் போட்ட காசு வீணாகாது என்று சொல்வார்கள் அதை கடைபிடிக்கும் உங்களின் முடிவு அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம்.


R S BALA
மே 06, 2025 13:52

மிக்க சந்தோசம்


abdulrahim
மே 06, 2025 12:39

ஒரு சவரன் ஒரு லட்ச ரூபாயை தொட்டாலும் ஆச்சர்யமில்லை ...


ديفيد رافائيل
மே 06, 2025 11:17

1600 rupees குறைச்சதுக்காக இப்போ price increase பண்றானுங்க, கேட்டா GDP மீது பழி போடுவானுங்க பரதேசிங்க. GDP மேல பழி போட்டா இவனுங்க யோக்கியன் நினைப்பு. 1600 rupees குறைச்சதுக்காக இனி வரும்காலங்களில் 4500 rupees வரைக்கும் price increase பண்ணிடுவானுங்க.


M.Malaiarasan,Tuticorin
மே 06, 2025 10:32

Standard News....


சமீபத்திய செய்தி