சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,340க்கும், ஒரு சவரன் ரூ.58,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. கடந்த ஜன.,08ம் தேதி சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,225க்கும், ஒரு சவரன் ரூ.57,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஜன.,13) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ. 58,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.7,340க்கு விற்பனை ஆகிறது. (ஜன.1 முதல் ஜன.13) வரையிலான தங்கம் விலை நிலவரம்;1/01/2025 - ரூ.57,2002/01/2025 - ரூ.57,4403/01/2025 - ரூ.58,7204/01/2025 - ரூ.57,7205/01/2025 -ரூ.57,7206/01/2025 -ரூ.57,7207/01/2025 -ரூ.57,7208/01/2025 - ரூ.57,8009/01/2025 -ரூ.58,08010/01/2025 -ரூ.58,28011/01/2025- ரூ.58,52013/01/2025- ரூ. 58,720 தை மாதத்தில் சுப முகூர்த்த நிகழ்வுகள் அதிகமாக நடக்கும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.