வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தங்கம் விலை தொடர்ந்து குறைய வேண்டும்
இஸ்ரோ வின் ராக்கெட்டை விட வேகமானது
சென்னை: சென்னையில் இன்று (செப் 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.78,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால், கடந்த மாத இறுதியில் இருந்து, நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,805 ரூபாய்க்கும், சவரன், 78,440 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று திடீரென, தங்கம் விலை கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 9,795 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 80 ரூபாய் சரிவடைந்து, 78,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (செப் 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.78,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,865க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்தை நெருங்கி நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து குறைய வேண்டும்
இஸ்ரோ வின் ராக்கெட்டை விட வேகமானது