உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1480 உயர்வு; ஒரு சவரன் ரூ.91,080க்கு விற்பனை

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1480 உயர்வு; ஒரு சவரன் ரூ.91,080க்கு விற்பனை

சென்னை: சென்னையில் இன்று (அக் 08) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.90,400க்கும், கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,300க்கும் விற்பனை செய்யப்பட்டது. மதியம் மீண்டும் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,080க்கு விற்பனை ஆகிறது.அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு கொள்கையால், பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், சர்வதேச முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்கின்றனர். சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால், நம் நாட்டிலும் அதன் விலை அதிகரித்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n2yg8jam&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 06), ஆபரண தங்கம் கிராம், 11,125 ரூபாய்க்கும், சவரன், 89,000 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (அக் 07), தங்கம் விலை கிராமுக்கு, 75 ரூபாய் உயர்ந்து, 11,200 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 600 ரூபாய் அதிகரித்து, 89,600 ரூபாய்க்கு விற்கப் பட்டது. இந்நிலையில் இன்று (அக் 08) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து, ரூ.90,400க்கும், கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,300க்கும் விற்பனை செய்யப்பட்டது. மதியம் மீண்டும் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,080க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,385க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,480 அதிகரித்து உள்ளது. இதுவே தங்கம் விற்பனையில் உச்ச விலையாகும். ஒரு சவரன் தங்கம் விலை ரூ.91 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

R S BALA
அக் 08, 2025 13:21

தங்க நகை விலை ஏறிக்கொண்டே செல்வதால் நகைக்கு ஈடாக கொடுக்க நகை தரகர்களிடம் பணம் இல்லயாம் தீர்ந்துவிட்டதாம்..


R S BALA
அக் 08, 2025 13:17

தினசரி தங்கத்தின் விலை உச்சம் எனில் பணத்திற்கு மதிப்பில்லை என்றுதானே அர்த்தம்...


Balaji Ramanathan
அக் 08, 2025 11:26

AFTER NEW YEAR IT MAY REACH RS.1,00,000/- PER SOVEREIGN.


இளந்திரையன் வேலந்தாவளம்
அக் 08, 2025 10:29

தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி... பழைய தங்கம் கையிருப்பு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி


mahalingamssva
அக் 08, 2025 10:24

எனக்கு ஒரு யோசனை, கொஞ்ச நாட்களுக்கு, ஒரு வாரம்/மாதம், தங்கத்தில் விலை ஏற்ற இறக்கங்களை கண்டுக்காம, அதற்கு முக்கியத்துவம் கொடுக்காம, அது குறித்த செய்திகளை வெளியிடாமல் இருந்தால் நல்லதுன்னு தோனுது. அதன் மீதான மாயை குறைய சிறு முயற்சிதான்.


தமிழன்
அக் 08, 2025 10:43

சரி


தலைவன்
அக் 08, 2025 11:20

பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டு விடும்.


முக்கிய வீடியோ