உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 13,250 ரூபாய்க்கும், சவரன் 1,06,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று காலை, தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து, 13,220 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 240 ரூபாய் சரிவடைந்து, 1,05,760 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. மாலை, தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து, 13,320 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து, 1,06,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. இதையடுத்து, நேற்று தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !