உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; ஒரு சவரன் ரூ.63,520!

தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; ஒரு சவரன் ரூ.63,520!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (மார்ச்.,01) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 சரிந்து ஒரு சவரன் ரூ.63,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. பிப்.,, 24ம் தேதி 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,055 ரூபாய்க்கும், சவரன், 64,440 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. பிப்.,25ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 8,075 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 64,600 ரூபாய்க்கு விற்பனையானது.பிப்.,26ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.64,400க்கு விற்பனை செய்யப்பட்டது. பிப்.,27ம் தேதி சவரனுக்கு ரூ.320 சரிந்து, ஒரு சவரன் ரூ.64,080க்கு விற்பனை ஆனது. நேற்று (பிப்.,28) சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.63 680க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று (மார்ச்.,01) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 சரிந்து ஒரு சவரன் ரூ.63,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,940க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தமிழன்
மார் 01, 2025 11:23

என் வாழ்க்கையில் 2006 ல் ஒரு கெட்ட நிகழ்வு நடந்தது அப்போது சவரன் வெறும் 6200 ரூபாய் இனி சாமானியன் கண்களால் தங்கத்தை பார்த்து திருப்தி போட்டுக் கொள்ள வேண்டியதுதான் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பாடு இனி திண்டாட்டம்தான் விலை ஏற ஏற தங்கத்துக்காக கொலை கொள்ளை அதிகமாகும் கலியுகம் இது


skv srinivasankrishnaveni
மார் 01, 2025 10:34

ஆமாம் கொள்ளைமலிவு ஒன்லி கறுப்புப்பணம் இருந்தாலே வாங்கிக்குவிக்கலாம் எங்களைப்போல அடிமட்டங்கள் தங்கம் பொன்னம்மா சொர்ணம் என்று பெருவச்சுக்கலாம் அவ்ளோதான்1kiraamkooda vaangkamudiyaadhu


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை