வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தக்காளி, வெங்கயமே விலைவாசி இருக்கும் நிலையில் வாங்க முடியாது. தங்கம் விலை ஏறினால் என்ன, ஏறாவிட்டால் என்ன?
சென்னை: சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.7,280க்கும் சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.58, 240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை சீசனில் தங்கம் விலை தொடர்ந்து உயர்வது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தீபாவளி சீசனில் போனஸ் உள்ளிட்ட பணம் வரவு காரணமாக நகை விற்பனை கணிசமாக அதிகரிக்கும். அவ்வாறு நகை வாங்க காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2agnlmwu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று(அக்.,19) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,280க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,240க்கு விற்பனை ஆகிறது.இதன்மூலம் தங்கம் விலை இதுவரையில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 1,480 அதிகரித்துள்ளது.இதேபோல, ஒரு கிராம் வெள்ளி ரூ.2 அதிகரித்து ரூ.107க்கு விற்பனையாகி வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தக்காளி, வெங்கயமே விலைவாசி இருக்கும் நிலையில் வாங்க முடியாது. தங்கம் விலை ஏறினால் என்ன, ஏறாவிட்டால் என்ன?