சென்னை: சென்னையில் இன்று (அக் 15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,860க்கு விற்பனை ஆகிறது.சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 13), ஆபரண தங்கம் கிராம், 11,580 ரூபாய்க்கும், சவரன், 92,640 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 197 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுவே, தங்கம் மற்றும் வெள்ளி விலையில் உச்சம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cp7he7vl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று (அக் 14) ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு, 245 ரூபாய் உயர்ந்து, 11,825 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,960 ரூபாய் அதிகரித்து, 94,600 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி கிராம், 9 ரூபாய் உயர்ந்து, 206 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இந்நிலையில் இன்று (அக் 15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,860க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.207க்கு விற்பனை ஆகிறது. இம்மாதம், 1ம் தேதி தங்கம் சவரன், 87,600 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த இரு வாரங்களில் மட்டும் சவரனுக்கு எப்போதும் இல்லாத வகையில், 7,280 ரூபாய் அதிகரித்துள்ளது.