உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வார துவக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.71,600!

வார துவக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.71,600!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 02) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மே 31ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.8,920க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.71,360க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. இந்நிலையில், வார துவக்க நாளான இன்று (ஜூன் 02) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,950க்கு விற்பனை ஆகிறது.தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தாமரை மலர்கிறது
ஜூன் 02, 2025 21:34

இந்தியர்களின் தங்கமோகம் விலையை அதிகரிக்கிறது. பிஜேபி ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சியால் மக்களிடம் ஏராளமாக பணம் புரள்கிறது. அதை தங்கத்தில் மக்கள் முடக்குவதால், பொருளாதார தேக்கம் ஏற்படுகிறது. தங்கம் வாங்க ஜிஎஸ்டி வரியை பத்து சதவீதமாக உயர்த்துவது மற்ற தொழில்களுக்கு பயனளிக்கும்.


M. PALANIAPPAN, KERALA
ஜூன் 02, 2025 14:58

கொஞ்ச நாள் நகை கடை பக்கம் தலை காட்டாமல் இருந்தால் போதும்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 02, 2025 10:33

என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் ஏறிய தங்கம் விலை எழுபதாயிரத்திற்கு கீழ் இறங்காது.....ஏறியது ஏறியது தான்


சமீபத்திய செய்தி