உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை இன்றும் குறைவு; 2 நாளில் மட்டும் ரூ.1,360 சரிவு

தங்கம் விலை இன்றும் குறைவு; 2 நாளில் மட்டும் ரூ.1,360 சரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. சர்வதேச நிலவரங்களால் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து, நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரூ.75 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. நேற்று ரூ.1,000 குறைந்து காணப்பட்ட தங்கம் விலை, 2வது நாளாக இன்று குறைந்துள்ளது. இரு நாட்களில் ரூ.1,360 குறைந்திருப்பது இது ஆபரண பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (ஜூலை 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.73,680க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.125 குறைந்து, ஒரு கிராம் ரூ.45 சரிந்து, ரூ.9,210க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sowmiyan
ஜூலை 25, 2025 11:31

1760 ரூபாய் ஒரு பவுனுக்கு இரு நாட்களாக உயர்ந்து தற்போது 1360 குறைந்துள்ளது. ஏற்றுவது 10 ரூபாய் குறைப்பது 7 ரூபாய் திரும்ப 15 ரூபாய் ஏற்றுவது பின் 10 ரூபாய் குறைப்பது இப்படிதான் இரு ஆண்டுகளாக போய்க் கொண்டிருக்கிறது


sundarsvpr
ஜூலை 25, 2025 10:58

தங்கம் விலை மாற்றத்தால் பயன் அடைபவர்கள் ஏழைகள் அல்ல.


புதிய வீடியோ