தங்கம் விலை கிடுகிடு உயர்வு: சவரனுக்கு ரூ.720 அதிகரிப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னையில் இன்று (செப் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.86,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,860க்கு விற்பனை ஆகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 10,640 ரூபாய்க்கும், சவரன் 85,120 ரூபாய்க்கும் விற்பனையானது.ஞாயிற்றுக்கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை. நேற்று (செப் 29) காலை தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து, 10,700 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து, 85,600 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.நேற்று மதியம் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, 10,770 ரூபாய்க் கு விற்பனையானது. சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 86,160 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு 130 ரூபாயும், சவரனுக்கு 1,040 ரூபாயும் அதிகரித்தது.இந்நிலையில் இன்று (செப் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.86,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,860க்கு விற்பனை ஆகிறது. இன்று சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 86,880 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது.