உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை புதிய உச்சம்; ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்துக்கு விற்பனை

தங்கம் விலை புதிய உச்சம்; ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்துக்கு விற்பனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (செப்.,24) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7 ஆயிரத்துக்கும், ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.சர்வதேச நிலவரங்களால் உள்நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 21ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,960 ரூபாய்க்கும்; சவரன், 55,680 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 98 ரூபாய்க்கு விற்கப்பட்டது. * செப்டம்பர் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. * நேற்று(செப்.,23) தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 6,980 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 55,840 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.* இந்நிலையில், இன்று(செப்.,24) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனைகிறது. ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.56 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. * கடந்த மூன்று தினங்களாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1,240 உயர்ந்துள்ளது.* இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலை. வெள்ளி விலை எவ்வித மாற்றமின்றி கிராமுக்கு ரூ.98க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Saai Sundharamurthy AVK
செப் 24, 2024 19:16

இதற்கு பேசாமல் கலால் வரியை குறைக்காமல் இருந்திருக்கலாம். தங்க வியாபாரிகளின் சுயரூபம் வெளிப்பட்டு விட்டது.


R S BALA
செப் 24, 2024 15:50

ஏழைகள் ஏரோபிளனில் செல்வது போல எட்டா கனியாகியது தங்கம் விலை தூர நின்று பார்த்து கொள்ள வேண்டியதுதான் இனி..


P. VENKATESH RAJA
செப் 24, 2024 11:45

தங்கம் விலை உயர்வை கேட்டாலே மனது வலிக்கிறது


புதிய வீடியோ