உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,960 உயர்ந்து புதிய உச்சம்

தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,960 உயர்ந்து புதிய உச்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (அக் 14) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1960 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.பல நாடுகளும், சர்வதேச முதலீட்டாளர்களும் அதிகளவில் தங்கம் வாங்குவதால், சர்வதேச சந்தையில் அதன் விலை உயர்ந்து வருகிறது. நம் நாட்டிலும் தங்கம் விலை உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 11,500 ரூபாய்க்கும், சவரன் 92,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 190 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று (அக் 13) காலை தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து, 11,525 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 92,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 195 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு 55 ரூபாய் அதிகரித்து, 11,580 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து, 92,640 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 2 ரூபாய் உயர்ந்து, 197 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (அக் 14) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1960 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.245 அதிகரித்து ஒரு கிராம் ரூ.94,600க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1960, ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்கியது. தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

புதிய உச்சம்

தங்கத்திற்கு போட்டி போட்டு கொண்டு வெள்ளி விலையும் சரமாரியாக உயர்ந்து வருகிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.206க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 200 ரூபாயை தாண்டி புதிய உச்சம் தொட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ganesh
அக் 14, 2025 10:15

என்று இந்த செயற்கை குமிழ் வெடிக்க போகுராதோ தெரிய வில்லை.... பங்கு சந்தைகள் உயரும் நேரம் வந்து விட்டது


ramesh
அக் 14, 2025 10:13

நகை கடைக்காரர்களுக்கு இப்போது இருக்கும் நிலையில் விற்பதை விட விற்காமல் ஸ்டாக் ஆக வைத்து கொள்வதே மகிழ்ச்சி ஆக இருக்கும்


ramesh
அக் 14, 2025 10:11

நாட்டில் தங்க விலையை பொறுத்தவரை என்ன நடக்கிறது என்று புரியவில்லை. தங்கவிலை உலக மார்க்கெட் சிங்கப்பூர்ல் இருக்கிறது. ஆனாலும் இந்தியா மார்க்கெட்டை நிர்ணயிப்பது மும்பாயை சேர்ந்த 4 பேர்தான் முக்கிய காரணம் என்று ஒரு சில வருடங்களுக்கு முன்பு சிறப்பு கட்டுரைகள் வந்து இருந்தது. இப்போது ஏறும் ஏற்றத்தை பார்த்தால் செயற்கையாக ஏற்றப்படுவது நன்கு தெரிகிறது. இந்த நான்கு பேர் பேராசையை பார்த்தால் மைதாஸ் என்ற பேராசைக்காரனின் கதை தான் நினைவுக்கு வருகிறது. பாமர மக்கள் இனிமேல் எப்படி தங்களது மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியும்.பெண்களுக்கும் இந்த தங்கத்தின் மேல் உள்ள மோகம் குறையும் வரை கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஆண்களின் பாடு திண்டாட்டம் தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை