உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு: சவரன் ரூ.320 உயர்ந்து விற்பனை

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு: சவரன் ரூ.320 உயர்ந்து விற்பனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.ஆபரணத் தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாக மாற்றங்கள் காணப்பட்டு வந்தன. முன் எப்போதும் இல்லாத வகையில் காணப்பட்ட விலை உயர்வு மக்களை வெகுவாக அதிர்ச்சி அடைய வைத்தது. நாளை அட்சய திருதியை என்பதால் தங்கம் விலையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இன்று தங்கத்தின் விலையில் சற்றே உயர்வு காணப்படுகிறது. நேற்று விலை குறைந்த ஆபரணத் தங்கம் இன்று (ஏப்.29) சவரனுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது.அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ. 40 உயர்ந்து ரூ.8980 ஆக உள்ளது. ஒரு சவரன் ரூ.71840க்கு விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியை நாளில் விலை நிலவரம் மாறலாம் என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Balasubramanian
ஏப் 29, 2025 10:06

நாளை அட்சய திருதியை - இனி ஆபரணங்கள் வாங்கும் முன் கொஞ்சம் பங்கு சந்தை நிலவரத்தையும் கவனித்து சென்றால் நல்லது


சமீபத்திய செய்தி