உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபரணத்தங்கம் காலையில் ரூ.200, மாலையில் ரூ.440 அதிரடி உயர்வு; சவரன் விலை ரூ.92,640

ஆபரணத்தங்கம் காலையில் ரூ.200, மாலையில் ரூ.440 அதிரடி உயர்வு; சவரன் விலை ரூ.92,640

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று மீண்டும் இருமுறை ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்தது. காலையில் ரூ.200 உயர்ந்து காணப்பட்ட நிலையில் மாலையில் ரூ.440 அதிகரித்துள்ளது.சர்வதேச அளவில் காணப்படும் பொருளாதாரச்சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகளால் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. சில தருணங்களில் காலை, மாலை என இருமுறை தங்கம் விலையில் ஏற்றம் காணப்படுகிறது.அதன்படி இன்று காலை சவரன் ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 92,200 என்ற புதிய உச்சத்தை எட்டியது. ஒரு கிராம் ரூ.25 அதிகரித்து, ரூ.15,525க்கு விற்பனையானது. இந் நிலையில், இன்று மாலையிலும் தங்கத்தின் விலை அதிரடி உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ரூ.55 உயர்ந்து ரூ.11,580 ஆக உள்ளது. சவரன் ரூ.440 அதிகரித்து ரூ.92,640 என்கிற புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. வெள்ளி விலையும் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.197ஆக விற்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D Natarajan
அக் 13, 2025 21:54

ஒரு பத்து நாளுக்கு யாரும் தங்கம் வாங்காமல் இருங்கள். வேடிக்கை ஆரம்பம்


அப்பாவி
அக் 13, 2025 18:34

அமோக வளர்ச்சி.. நிமிஷத்துக்கு நம்பிக்கை வளர வாழ்த்துகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை