உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரண்டே நாளில் மாறிய தங்கம் நிலவரம்! இன்றைய விலை இதோ!

இரண்டே நாளில் மாறிய தங்கம் நிலவரம்! இன்றைய விலை இதோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இரண்டே நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ஏறுமுகமாகி உள்ளது.உலகளாவிய பொருளதார சூழலுக்கு ஏற்ப இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அவ்வப்போது விலையில் ஏற்றமும், வீழ்ச்சியும் காணப்படுகிறது. கடந்த 2 நாட்களில் சவரனுக்கு கிட்டத்தட்ட 1,760 ரூபாய் விலை குறைந்தது.இந்நிலையில் இன்று (நவ.,27) மீண்டும் தங்கம் விலை உயர்வை கண்டுள்ளது. சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,840 ஆக உள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ. 7105க்கு விற்பனையாகிறது. இது குறித்து நகை வியாபாரிகள் கூறியதாவது; சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் சரிவு காணப்பட்ட போதிலும், கடந்த 2 நாட்களில் எதிர்பார்த்த அளவில் தங்கம் விலை சரியவில்லை. குறிப்பாக நேற்று மட்டும் சர்வதேச சந்தையில் 3 சதவீதம் தங்கம் விலை குறைந்தது. ஆனால், இந்தியாவில் விலை எதிர்பார்த்த அளவு குறையவில்லை. அடுத்து வரக்கூடிய நாட்களில் தங்கத்தின் விலை உயர்வை தொடக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை