உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 நாளில் ரூ.1760 குறைந்தது; தங்கம் வாங்க தங்கமான நேரம்!

2 நாளில் ரூ.1760 குறைந்தது; தங்கம் வாங்க தங்கமான நேரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தங்கம் விலை 2 நாட்களில் 1,760 ரூபாய் விலை குறைந்துள்ளது, நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பொருளாதார விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சில மாதங்களாக விலையில் ஏற்றம், இறக்கம் காணப்பட்ட நிலையில் சில நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படுகிறது.இந்நிலையில் சென்னையின் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.,26) அதிரடியாக சவரனுக்கு ரூ.960 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ. 56,640ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் ரூ.120 குறைந்து, ரூ.7080 ஆக உள்ளது. கடந்த 2 நாட்கள் தங்கம் விலை நிலவரத்தை ஒப்பிட்டால் 1760 ரூபாய் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதிரடியாக ஒரு சவரனுக்கு ரூ.1760 சரிந்துள்ளதால் தங்கத்தை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.விலை நிலவரத்தில் அடுத்து வரும் நாட்களில் மாற்றம் காணப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வியாபாரிகள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை