மேலும் செய்திகள்
சென்னையில் 46 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
20-Mar-2026
சென்னை: சிங்கப்பூரில் இருந்து நேற்று வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணியர் இறங்கி சென்றதும், விமான நிறுவன ஊழியர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது, இருக்கைக்கு அடியில், 'பார்சல்' ஒன்று கிடந்தது. இது பற்றி, சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், பார்சலை சோதனை செய்தபோது, அதில் வெடி மருந்துகள் இல்லை என தெரிய வந்தது. இதையடுத்து, சுங்கத் துறை அதிகாரிகள் அந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அதில், 3.10 கோடி ரூபாய் மதிப்புள்ள, 24 காரட் தங்கக்கட்டிகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து, தங்கக்கட்டிகள் கடத்தி வந்த நபர்கள் குறித்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
20-Mar-2026