உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதற்கான ஆதாரம் இருக்கிறது; ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி உறுதி

கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதற்கான ஆதாரம் இருக்கிறது; ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி உறுதி

சென்னை: கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது, அதற்கான ஆதாரமும் உள்ளது என்று சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி கூறி உள்ளார். இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களிடம் பேசியதாவது; கோமியத்தில் விஞ்ஞான பூர்வமாக நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? நான் ஒரு 5 ஆராய்ச்சிக் கட்டுரைகளை உங்களுக்கு (செய்தியாளர்களுக்கு) தருகிறேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f6zcvxur&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த 5 ஆராய்ச்சிக் கட்டுரைகளும் அமெரிக்காவில் வெளியானது. நேச்சர் (nature) என்ற முன்னணி அறிவியல் இதழில் ஆராய்ச்சி கட்டுரையாக வந்துள்ளது. அது தொடர்பான அமெரிக்க காப்புரிமை பற்றிய விவரங்களையும் தருகிறேன். இதைத்தான் நான் அன்றைய நிகழ்ச்சியில் கூறினேன். கோமியத்தில் ஆன்டிபங்கல், ஆன்டி இன்ப்ளாமேட்டிவ் பாக்டீரியா இருப்பதாக நான் சொன்ன விஷயங்கள் இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியாக நிரூபித்து உள்ளனர். இதையே தான் அன்றும் நான் சொன்னேன். எல்லாரும் அதை படித்துக் கொள்ளுங்கள். மிகவும் எளிதான மொழியில் தான் இருக்கும். ஆராய்ச்சிக் கட்டுரைகளில் வெளியான முடிவுகள் தான் அந்த ஆதாரம். பரிசோதனை செய்துள்ளனர், நிரூபித்துள்ளனர். காப்புரிமையும் பெற்றுள்ளனர். அதுதான் விஞ்ஞானப்பூர்வ ஆதாரம். கோமியம் ஆபத்தானது என்பது பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியானதாக சமூக வலைதளங்களில் வருகின்றன. எனக்கு அவை பற்றி தெரியாது. ஆனால் நான் குறிப்பிடும் அமெரிக்காவின் நேச்சர் இதழில் வந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் ஆதாரம் இருக்கிறது. இந்த கட்டுரையில் நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளனர் என்பதையும் கூறி உள்ளனர்.வேற கண்டுபிடிப்புகளும் இருக்கலாம், ஆனால் நான் குறிப்பிடும் இந்த விஷயங்கள் அதில் உள்ளன என்பது தெளிவாக இருக்கிறது. இப்போது தான் இந்த விஷயம் பற்றி நிறைய ஆர்வம் இருப்பது தெரிகிறது. இவ்வளவு பேர் இன்று இதை பற்றி பேசுகிறோம். இண்டியன் ஸ்கூல் ஆப் மெடிசன் இது குறித்தும் ஆய்வு செய்து தெரிவிக்கலாம். சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள மெடிக்கல் சயின்ஸ் துறையில் விருப்பம் உள்ளவர்கள் இதை பற்றி ஆராய்ச்சி செய்யலாம். எங்களுக்கு சில பண்டிகைகள் வரும் போது நாங்கள் பஞ்சகவ்யம் சாப்பிடுகிறோம். நான் நிச்சயமாக பஞ்சகவ்யம் சாப்பிடுவேன்.இவ்வாறு காமகோடி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

baala
ஜன 23, 2025 09:25

குடிக்கிறவர்கள் சத்தமில்லாமல் குடிக்கலாம். எதற்கு இவ்வளவு வார்த்தை சண்டை. அவரவர் கருத்தை எழுத அவரவர்களுக்கு உரிமை உண்டு இல்லையா


Dharmavaan
ஜன 22, 2025 10:03

முன் காலத்தில் வீட்டை சுத்தம் செய்ய நாட்டு பேசுனசானத்தை கரைத்து தெளித்தார்கள்.


thiagarajan paulsamy
ஜன 21, 2025 17:23

IIT இயக்குனருக்கு தெரியாத அறிவியலா நமக்கு தெரிந்துவிட்டது? இத்தனைகாலம் அதனை பூதம் என்று நினைக்கவைக்கப்பட்டோம் அதனை மாற்றிக்கொள்ள நமக்கு மனமில்லை , அவ்வளவுதான். நமது கலாச்சாரத்தில், ஆன்மீகத்தில் உள்ளவை எல்லாமே அறிவியல் தான் இதனை புரிந்து கொள்ள நிறைய நாளாகும் பகுத்தறிவு மாஸ்க் போட்டவர்களுக்கு. தற்கால அறிவியலா பாரம்பரிய விஷயங்களை எது சரி என்பதை அளக்க உங்களிடம் அளவுகோல் ஏது ?


Murthy
ஜன 21, 2025 13:40

யாரவேண்டாம் என்கிறார்கள் .


அப்பாவி
ஜன 21, 2025 10:53

வருங்கால கெவுனர் வாழ்க. உசுப்பேத்துவோம். காசா பணமா?


AMLA ASOKAN
ஜன 21, 2025 09:54

கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கலாம். ஆனால் அது பசுவின் மூத்திரம். அது ஒரு விலங்கின் கழிவுப்பொருள். வேறு பல விலங்குளிலும் அது போல் இருக்கலாம். எத்தனையோ பழம், கீரைகளில், தானியங்களில், இயற்கையின் விளைபொருள்களில் எதிர்ப்பு சக்திக்கான குணங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு IIT யின் இயக்குனர் இத்தகு கருத்துக்களை கூறுவதும் அதை வலுப்படுத்துவதும் அவரது பிற்போக்குத்தனத்தை காட்டுகிறது .


Dharmavaan
ஜன 22, 2025 09:53

மடையனுக்குத்தான் எல்லா விலங்கும் ஒன்றல்ல என்பது தெரியாது ஒவ்வொரு மூலிகைக்கு ஒவ்வொரு மருத்துவ குணம் போல விலங்குக்கு அப்படியே, நுண்ணறைவற்றதற்கு எல்லாம் ஒன்றுதான் ...மனித ரத்தத்திலேயே பல வகை எல்லாவற்றையும் மாற்றிக் கொடுக்கலாமா மிருக ரத்தமும் செந்நிறமே அதை மனிதனுக்கு ஏற்றலாமே எல்லாம் ஒன்றுதான் என்றால்


surya krishna
ஜன 21, 2025 04:19

it is 100% true and scientifically proven, but anti Hindus and Abrahamics are not accepted....


Mediagoons
ஜன 21, 2025 02:32

இப்படி ஏதாவது IIT பாட புத்தகத்தில் வந்துள்ளதா? அல்லது பாஜவில் சேர்ந்து இந்து மதவாத அரசியல் செய்யபோகிறாரா?


Amuthan
ஜன 21, 2025 01:57

Educated but superstitious beliefs follower. No brain to question the beliefs. Trying to substantiate the nonsense beliefs.


Srinivasan Krishnamoorthy
ஜன 21, 2025 09:26

he is talking sense and with proof. only dravidians and periayatists make sound without proof. you are talking scientific proof ively, why is nataraja idol in CERN, go and research


naadodi
ஜன 21, 2025 01:05

பாம்பின் விஷத்திலிருந்து எடுக்கப்படும் சர்பாசில் மாத்திரையும் ஒரு மருந்துதான். Nature தளத்தில் குறிப்பிட்டது ஒன்றும் பொய்யல்ல. எப்படி அம்மை நோய் அம்மையைத் தடுக்கிறது போல, இதுவும் ஒரு மருந்துதான். இதனை ஏற்காத அளவுக்கு திராவிட விஷ விதை வளர்ந்துள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை