வாசகர்கள் கருத்துகள் ( 18 )
என்ன, ட்ரம்ப் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க நாள் குறித்து விட்டார்களா?
அமெரிக்கா விதித்த வரியால் நஷ்டமடைபவர்களுக்கு உதவியாக நாங்கள் இருப்போம்.
மிக அதிக கடனாளி நாடு அமெரிக்கா. அவர்களது மரபணு மாற்றப்பட்ட விதைகளை வாங்க வைக்கவே இந்த மிரட்டல் வரி. சில லட்சம் திருப்பூர் ஆட்கள் நலனுக்காக நமது 80 கோடி விவசாயிகள் வாழ்வாதாரத்தை கெடுக்கணும் என்பது உங்க வேண்டுகோள்?.
குஜராத் நிறுவனங்களுக்கு ஆதாயமாக...' - அமெரிக்க வரி விவகாரத்தில் மோடி மீது மு.க.ஸ்டாலின் விமர்சனம். “குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்?” என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசியல்வாதிகள் சாராய ஆலை நிறுவுவதில் ஆர்வமா இருப்பார்கள் ..நீங்க மினி refining plant நிறுவி மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யலாமே
அமெரிக்க வரியால் ஏற்றுமதி சரக்குகளை குறைந்த விலைக்கு விற்கிறோம் என்று ஏற்கனவே பல நகரங்களில் வியாபாரம் தொடங்கி கல்லா காட்டறாங்க
இழப்பை ஈடுகட்ட வருமானவரி விகிதத்தைப் பழையபடி மாத்தப்போறீங்களா ????
ஏன்? இங்கே ஏற்றுமதி ஆக்காத பொருளை சீனாவுக்கும், ரஷியாவுக்கும் அனுப்பலாமே. கூடவே சில h1 b விசாக்களும் குடுக்கும்படி கேக்கலாமே. அதுக்குத்தானே மும்மூர்த்திகள் கூடி பேசினாங்க.
நீங்க ரெண்டு துணி வாங்குபவராக இருந்தால் மூன்று வாங்கினால் போதும் ..ஏற்றுமதிக்கு அவசியமே இருக்காது
முதலாளிகளை பொறுத்த வரையில் எல்லா வரிகளும் குறைய வேண்டும் என்பதே. ஆனால் அரசாங்கத்தை வரி காட்டாமல், ஏமாற்றும் மக்கள் இருக்கும் வரையில், அரசாங்கத்தின் தொழிலுக்கான இலவசமும் குறையவே செய்யும். தொழில் முனைவோர், முதலாளிகள் ஒரே சந்தையை நம்பாமல் பல நாடுகளுக்கு வியாபாரம் செய்வதும், பெரிய முதலாளிகள் அமெரிக்கா நட்புள்ள நாடுகளில் வியாபாரத்தை விரிவு படுத்துவதும், ஏற்றுமதியை அதிகரிக்க உதவும்.
எல்லா அறிவிப்பும் வரும் என்று ஏதோ குகுடுப்பை காரன் போல சொல்லி கடைசியில் கார்பொரேட்களுக்கு கண்டிப்பா நிவாரணம் இருக்கும் ,140 கோடி ஏழை கண்ணீர் விடலாம் ஆனால் ஒரு நாலு கார்பொரேட் கஷ்டபட்டு விட கூடாது
வேலை வாய்ப்பு தருவது கார்பொரேட் தான் …நீங்க குறைந்தபட்சம் நாடார் பாணியில் சின்ன பிசினஸ் ஆரம்பித்து அம்பானி லெவல் இல்லாவிட்டாலும் சரவணா அல்லது ஜெயச்சந்திரன் அல்லது அடையாறு ஆனந்தபவன் அளவுக்கு வளர்ந்து காட்டுங்களேன் ..200 க்கு எவ்வளவுநாள் கூவறது ?
ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த கடினமான சூழ்நிலையை சமாளிக்க மத்திய அரசுசின் நடவடிக்கைகளை எதிர்நோக்குவதைபோல் நிலைமை சீரடையும் வரை அந்தந்த மாநில அரசுகளும் சில உதவிகளை செய்ய முன்வரவேண்டும். மின்சாரக்கட்டணம், அரசுக்கு செலுத்தும் கட்டணங்கள் போன்றவற்றில் சலுகைகளை அளிக்கலாம்.
நீங்கள் என்னதான் இவர்களுக்கு நன்மையை செய்தாலும் இவர்களில் யாருக்குமே நன்றி விசுவாசமே இருக்குதுங்க.. அதிலும் நொள்ளை தான் சொல்வார்கள். அதிலும் திமுக ஆதரவு ஏற்றுமதியாளர்கள் இப்போதே அதற்கு உண்டான நொள்ளைகளை தேடிவைத்து குறை சொல்வார்கள்.
கோயம்பத்தூர்ல ஒருத்தன் நொட்டை சொன்னானே பன் பட்டர் ஜாம் ஜிஎஸ்டி பற்றி. அவன் கம்பெனியில எப்படி ஏமாற்றுகிறான் என்று நியூஸ் வந்ததும் பொட்டி பாம்பா அடங்கியது ஞாபகம் வருது.