உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் நல்ல மாற்றம் தெரிகிறது!

தமிழகத்தில் நல்ல மாற்றம் தெரிகிறது!

நமது நிருபர்

'லஞ்சம் யாருக்கும் கொடுக்காதீர்கள்... யாராவது கேட்டால் இது விஜய் ஆட்சி என்று சொல்லுங்கள்' என்று பேசி அனைவருக்கும் புதிய நம்பிக்கையை அளித்துள்ளார் முதல்வர் விஜய். இதுவரை எந்த முதல்வரும், பிரதமரும் இது போல் அறிவித்தது கிடையாது என்பதால் அவரது ஆட்சிக்கு, அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பு கிடைத்து வருகிறது.பயத்தில் அதிகாரிகள் இதுவரை அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது. இந்த ஆட்சியில் குறைந்துள்ளது. முதல்வர் விஜய் பேச்சு சாமானிய மக்களிடம் 100 சதவீதம் சரியாக சென்றுள்ளது. அரசு அதிகாரிகளும் பயத்தில் உள்ளனர். லஞ்சம் கேட்டால் முதல்வர் பேசியதை தைரியமாக சொல்லி கொடுக்க மறுப்போம்.- சத்யபிரியா, அம்மன்குளம்கடுமையான சட்டம் இனி லஞ்சம் குறையும் என நம்பலாம். சட்டத்தை கடுமையாக்கி தண்டனை கொடுக்க வேண்டும். பொதுமக்களும் எந்த வேலைக்கும் பணம் கொடுக்க மாட்டேன் என உறுதியாக இருந்தால், லஞ்சம் முற்றிலும் ஒழிந்து விடும். நமது வேதனைகளை போக்க வந்துள்ள இந்த ஆட்சி தொடர வேண்டும்.- சந்திரசேகரன், ஒண்டிப்புதுார்தண்டனை கொடுக்கணும் எந்த ஆட்சி வந்தாலும் லஞ்சத்தை ஒழிக்க அனைவரும் உறுதி எடுக்க வேண்டும். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு மக்கள் முன் தண்டனை கொடுத்தால் அடுத்து வரும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை நிறுத்துவர். இதே போல மதுவையும் ஒழித்தால் மக்கள் நலமுடன் இருப்பர்.- ஸ்டெல்லா, வடவள்ளிலஞ்சமில்லா நிர்வாகம் விஜய் சினிமாவில் வசனம் பேசுவதுபோல் மக்களிடம் பேசுகிறார் என விமர்சிக்கின்றனர். கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரும் சினிமா துறையில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களில் யாரும் இதுபோல் பேசியதில்லை. இதை ஒரு நல்ல முன்னேற்றமாகவே பார்க்கிறோம்.- அகிலேஷ், போத்தனுார்மாற்றம் தெரிகிறது அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது, பணம் கொடுத்தால்தான் உதவிக்கு வருகிறார்கள். இந்த ஆட்சி வந்த பிறகு, எங்கள் பஞ்சாயத்தில் முன்பு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குப்பை அள்ளிச் சென்றனர். தற்போது வாரத்திற்கு ஒருமுறை அள்ளுகின்றனர். மாற்றம் தெரிகிறது- சீதா, சத்தியமங்கலம்மக்களின் தைரியம் அதிகரிக்கும் லஞ்சம் வாங்கினால் அதுதான் அவர்களின் கடைசி ஊதியம் என்கிற நிலை வந்துள்ளது. பணிக்கொடை உள்ளிட்ட எல்லா சலுகைகளும் தடைபடும். வேறு வேலைக்கு செல்ல முடியாது. சமீபத்தில் எனக்கு தெரிந்த ஒருவர் பத்திரப்பதிவு சென்றபோது, பணம் கொடுத்துள்ளார். அதிகாரி வாங்க மறுத்துள்ளார்.- லுார்துசாமி, புலியகுளம்புகார் எண் வேண்டும் முதல்வர் தலைமையில் அதிகாரமிக்க, நம்பிக்கையான, நேர்மையான அதிகாரிகளை கொண்டு தனிக்குழு உருவாக்கவேண்டும். மக்கள் நேரடியாக புகாரை அனுப்ப எண்களை வெளியிட வேண்டும். புகார் விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். லஞ்சம் இல்லாத அரசு அலுவலகம் சாத்தியம் ஆகலாம்.--அனுராதா, சலீவன் வீதிலஞ்சம் கேட்டால் நடவடிக்கை காமராஜர் ஆட்சி காலத்தில் லஞ்சம், ஊழல் இல்லை. அதே போல இந்த ஆட்சியும் இருக்கும். அரசு ஊழியர்கள், அதிகாரிகள் எந்த துறையில் இருந்தாலும் அவர்கள் லஞ்சம் கேட்டால் தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் கேட்டால் தர மாட்டேன் என்று பொதுமக்களும் துணிச்சலுடன் கூற வேண்டும்.-பார்த்திபன், புலியகுளம்கல்வியில் லஞ்சம் அரசு பணிகள் டெண்டர் எடுத்தால், 40 சதவீதம் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் ஒப்பந்த பணிகள் தரமற்றதாக இருக்கிறது. பள்ளி, கல்லுாரிகளில் நன்கொடை என்ற பெயரில் பணம் வசூலிக்கின்றனர். இதுவும் லஞ்சம் தான். இதை ஒழித்து கல்லுாரி படிப்பு வரை இலவச கல்வி அளிக்க வேண்டும்.--மோகன்ராஜ், சவுரிபாளையம்தைரியமாக புகாரளிக்க வேண்டும் இதுபோன்ற அறிவிப்பு, அரசு மீது மக்களுக்கு நம்பிக்கையையும், லஞ்சத்துக்கு எதிராக குரல் கொடுக்க தைரியத்தையும் தரும். லஞ்சத்தை அரசால் மட்டும் தடுத்துவிட முடியாது. மக்களும் லஞ்சம் கொடுக்காமல், லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது புகார் அளிக்க வேண்டும்.- அகிலாண்டேஸ்வரி, போத்தனுார்அரசு சேவைகளுக்கு காலக்கெடு 'வேலை முடிந்தால் போதும்' என்ற எண்ணத்தில் பலரும் லஞ்சம் கொடுக்கின்றனர். இந்த நிலையை மாற்ற, அனைத்து அரசு சேவைகளுக்கும் கட்டாய காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். உரிய காரணமின்றி விண்ணப்பங்களை நிலுவையில் வைத்தாலோ காலதாமதம் செய்தாலோ, அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அரவிந்தன், குறிச்சிமாற்றத்துக்கான அடித்தளம் ஒரு முதல்வரே, யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என வெளிப்படையாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. முன்பைவிட லஞ்சம் குறைந்துள்ளதாக தெரிகிறது. முதல்வரே கூறியுள்ளதால், மக்களுக்கு கூடுதல் தைரியம் கிடைக்கும். விரைவில், தமிழகத்தில் மாற்றம் உருவாகும்.- சுமேஷ், ஐ.ஓ.பி., காலனிலஞ்சம் பெற்றவர்களுக்கு இடி முதல்வர் விஜய் பேச்சு, லஞ்சம் பெற்று வாழ்க்கை நடத்தும் அனைவருக்கும் இடி விழுந்தது போல் இருக்கும். இனி யாரும் லஞ்சம் கேட்க மாட்டார்கள். அப்படி கேட்டால், முதல்வர் பெயரை சொல்ல வேண்டியதுதான். இதுவரை எந்த முதல்வரும் சொல்லாததை இவர் கூறியுள்ளதால், அதற்கு நல்ல 'எபெக்ட்' இருக்கும் என நினைக்கிறேன்.-அசோக், நீலம்பூர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

s_raju
ஜூலை 14, 2026 06:07

எந்த அதிகாரியும் நேரடியாக லஞ்சம் கேட்பார்இல்லை . மாசக்கணக்கில் மனுக்களை பைசல் செய்யாமால் இழுத்தடித்தால் லஞ்சம் தானாகவே கொடுப்பார்கள் என்று அவர்களுக்கு தெரியும் . தீர்வு: மனுக்களுக்கு கால நிர்ணயம் செய்தல் , லஞ்சம் பெற்ற ஆதாரம் கிடைத்தால் பணி நீக்கமே . பணி இடை நீக்கமல்ல .dismissal.


R.RAMACHANDRAN
ஜூலை 13, 2026 07:35

லஞ்சம் இன்றேல் சேவை இல்லை என்ற நிலை இப்போதும் எப்போதும் தொடரும் வெறுமனே வார்த்தைகளில் எச்சரித்துக் கொண்டிருக்கும் வரை.


Ram
ஜூலை 13, 2026 07:34

I would like to share my experience. I have applied for a passport at Tiruchi passport office. They have directed the police to do on the spot verification. I have received a phone call from the designated police official attached to Srirangam police station around 7.45 PM yesterday whether I may be available. I requested him to come over to my house at the earliest to complete the job. The police arrived by 8.10 pm completed are formalities and left by 8.30 pm. The police official has done his job to my full satisfaction without any expectation. I am really proud of such police official in discharging his duties honestly. This is really a great change


Kadaparai Mani
ஜூலை 12, 2026 17:09

Corruption very high in all Chennai corporation zonal offices now. Any body can go and verify . Why malar simply supporting for advertisement.


Natarajan Ramanathan
ஜூலை 12, 2026 16:01

அதே கரூர் கூட்டத்தில் முதல்வர், அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் வேலை நிரந்தரமாக பறிக்கப்படும் என்றும் ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கலாம்.


V Venkatachalam, Chennai-87
ஜூலை 12, 2026 18:47

எனக்கு தெரிந்த இம்மீடியட் எஃபெக்ட் கொடுக்கும் ஒரே வழி. பப்ளிக்கில் கட்டி வைத்து கசையடி குடுப்பது தான். இதை ஆட்சேபிக்கும் மனித எருமைகள் கழகம் அதுக்கு சப்போர்ட் பண்றவிங்க எல்லாருக்கும் இதே தண்டனை குடுக்கணும். டமில் நாடு கிளீன் ஆயிடும். ஷ்யூர்.


MARUTHU PANDIAR
ஜூலை 12, 2026 14:38

தலைமை செயலகத்திலேயே இப்படி என்றால் கரூர் போன்ற ஊர்களில் துணிந்து வாங்க மாட்டார்களா? ஒன்றுமில்லை... ஓரிரு நாட்களில் முடிய வேண்டிய பணி ஒன்றை சிம்பிளா இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆறப் போட்டாலே போதும். அணுகிய மக்கள் டென்ஷன் ஆகி ""பேச "" முற்படுவார்களே? பழமும் தின்னு கொட்டையும் போட்ட ஆட்களுக்கா தெரியாது?


Kalyanasundaram Linga Moorthi
ஜூலை 12, 2026 14:31

100% false information when sold a property there is no Patta document so the Registrar told the agent tell the seller to send the money to a supermarket gpay number so many people buying their lands etc this way of transferring money electronically instead cash corruption everywhere


MARUTHU PANDIAR
ஜூலை 12, 2026 15:52

So the concerned officer collects the bribe in kind A to Z from his favourite supermarket regularly without any record or proof what so ever. Each of them is a kind of genius of his own


S. Venugopal
ஜூலை 12, 2026 16:45

இந்த பல் பொருள் அங்காடியும் அவர் லஞ்சம் பெற்ற பணத்தில் பினாமி பெயரில் நடத்துகிறாரா என்று விசாரணை நடத்த வேண்டும்


MARUTHU PANDIAR
ஜூலை 12, 2026 14:10

இப்போதே இந்த பி. ஏ ஒடுக்கா விட்டால் விடியல் நிச்சயம்.


MARUTHU PANDIAR
ஜூலை 12, 2026 13:50

சரிங்க. ஆனால் கோட்டையில் அந்த """"உதவியாளர்கள் """" அமைச்சர்களிடம் சாமான்யராகவே இருந்தா எப்படி? செட்டில் ஆக வேண்டாமான்னு பேசி மயக்கி அவர்களை முன்னிட்டு வசூலையும் தொடங்கிட்டாங்களாமே? போஸ்டிங் முதல் டெண்டர் வரை எல்லாத்துலயும் வசூல் சக்க போடு போடுதாமே? முதல்வர் கோட்டையில் தானே இருக்காரு? அதுனால இதெல்லாம் வெறும் .....


kjpkh
ஜூலை 12, 2026 13:34

சில பேர்களைத் திருத்தவே முடியாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அதனால் நல்ல பலன்கள் மக்களுக்கு கிடைக்கிறது. பள்ளிக்கூடம் கல்லூரிகள் இவைகளில் கோடிக்கணக்கான ரூபாயில் லஞ்சம் விளையாடி இருக்கிறது திராவிட மாடல் ஆட்சியிலே. சாலை வேலைக்கு வாங்கிய கோடிக்கணக்கான ரூபாய்களை கபளிகரம்செய்துவிட்டார்கள் .திராவிட மாடல் .ஆட்சியில். புதிய பஸ் வாங்குவதில் டயர்கள் வாங்குவதில் இன்னும் எல்லாத் துறைகளிலும் ஊழலோ ஊழல்.. இவ்வளவும் விஜய்ஆட்சிக்கு வந்ததால் தான் வெளியே தெரிகிறது.. இன்னமும் கழக ஆட்சிகளுக்கு ஆதரவு கொடுத்தால் தமிழ்நாடு சீரழிந்து விடும். நல்லது என்னடா பாதைஆதரியுங்கள். ஏதாவது இப்போதுள்ள ஆட்சியில் குறைகள் இருக்கத்தான் செய்யும். அது தமிழ்நாட்டை படு பாதாளத்திற்கு தள்ளும் அளவுக்கு குறைகள் இருக்காது.