உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சறுக்கிய அரசு பஸ்சை பாறையில் மோதி நிறுத்திய அசத்தல் டிரைவர்

சறுக்கிய அரசு பஸ்சை பாறையில் மோதி நிறுத்திய அசத்தல் டிரைவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிங்கம்புணரி: திருப்புத்துார் அரசு பஸ் டெப்போவில் இருந்து மேலவண்ணாரிருப்பு மலைப்பாதை வழியாக, இரண்டு, காலாவதி டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன்பு ஒரு பஸ், பிரேக் பிடிக்காத நிலையில் கண்டக்டர் கல்லை துாக்கிக் கொண்டு பஸ்சின் பின்னால் சென்று நிறுத்தினார்.மற்றொரு நாள் டவுன் பஸ் முன்னோக்கி மேடான பகுதியில் ஏற முடியாமல் பயணியரை இறக்கி நடக்கவிட்டு, சிறிது துாரம் சென்றபின் பயணியர் ஏறிச்சென்ற சம்பவமும் வைரல் ஆனது. தற்போது அதே பாதையில் மீண்டும் அதே பஸ், பிரேக் பிடிக்காமல் பின்னோக்கி நகர்ந்து விபத்தில் தப்பிய சம்பவம் நடந்துள்ளது.சிங்கம்புணரியில் இருந்து நேற்று காலை 9:10 மணிக்கு 20 பயணியருடன் புறப்பட்ட அரசு டவுன் பஸ், மேலவண்ணாரிருப்பு மலைப்பாதையில் ஏறியபோது பிரேக் பிடிக்காமல், பின்னோக்கி இறங்கத் தொடங்கியது. பயணியர் அச்சத்தில் கூச்சலிட்டனர்.டிரைவர் சாமர்த்தியமாக இடதுபுறம் இருந்த பாறையில் பஸ்சை மோதவிட்டு சிறிது துாரத்தில் நிறுத்தினார். இதில் பயணி ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.வலதுபுறம் பஸ் சென்றிருந்தால், பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபத்து நேர்ந்திருக்கும். இதைத் தொடர்ந்து பயணியர் கீழே இறக்கி விடப்பட்டு வேறு வாகனங்களில் சென்றனர். பஸ்சை டிரைவர் சிரமப்பட்டு மலைப்பாதை வழியாக ஓட்டிச் சென்று மறுபக்கம் கீழ் இறக்கி நடுரோட்டில் நிறுத்தினார். அவ்வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்புத்துார் டிப்போவில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு, பஸ் பழுது பார்க்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

rasaa
பிப் 20, 2025 14:53

இதுதான் திராவிட மாடல்


கண்ணன்
பிப் 20, 2025 11:52

விடியல் பேருந்தில் விடியல் பயணம்


Kalyanaraman
பிப் 20, 2025 08:32

காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் இது போன்ற அவலங்களுக்கு மிக முக்கிய காரணமே குற்றங்களுக்கு கடும் தண்டனை இல்லை என்பதே. ஆண்மையற்ற முதுகெலும்பற்ற சட்டங்களை ஒழுங்கு படுத்தினாலே 85 சதவீத குற்றங்கள் தானாகவே காணாமல் போய்விடும். என்று மாறுமோ அன்றுதான் நம் நாட்டின் உண்மையான வளர்ச்சியின் துவக்கம்.


orange தமிழன்
பிப் 20, 2025 06:19

பெரும்பாலான அரசு பேருந்து ஓட்டுனர்கள் மிக திறமை வாய்ந்தவர்கள்....மோசமான சாலைகள், சாலை விதிகளை பின் பற்றாத மக்கள், டப்பா பேருந்துகள், இவற்றை எல்லாம் மீறி பாதுகாப்பாக செயல் படுகிறார்கள்.....சில தவறு செய்ப வர்களும் இருக்கிறார்கள்.....


பிரேம்ஜி
பிப் 20, 2025 08:21

உண்மைதான்! அரசு பஸ் டிரைவர்கள் நிலை மோசம் தான்! எந்த பராமரிப்பும் இல்லாத வாகனங்கள்! சாலை விதிகளை மதிக்காத பொதுஜனம்! பொறுப்பற்ற அரசு! வாழ்க பாரத மாதா!


Balasubramanian
பிப் 20, 2025 06:17

கள்ள சாராயம் குடித்து இறந்து போனவர்களுக்கு பணம் குடுத்து கஜானா காலி! அப்பாவும் மகனும் அடுத்த தேர்தலில் பிஸி! இது எல்லாம் கண்டுக்க நேரம் இல்லை


Sundaran
பிப் 20, 2025 06:15

சிலை வைப்பதிலும் விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் கட்டுவதிலும் காட்டும் ஆர்வத்தை ஓட்டை பேருந்துகளை ஒழிப்பதில் காட்டுவதில்லை திருட்டு திராவிடம். மோடியை எதிர்ப்பதிலேயே காலத்தை ஓட்டுகிறது திராவிட கும்பல்


raja
பிப் 20, 2025 06:15

இதுதாண்டா திருட்டு திராவிட மாடல் ....


Kasimani Baskaran
பிப் 20, 2025 06:07

திராவிட தள்ளு மாடல் அரசு போலவே அரசு பேருந்தும். நல்லா வெளங்கும் டோய்...


sridhar
பிப் 20, 2025 06:06

அப்பா பெண்களுக்கு இலவச பஸ் உடறாரு ..


Bye Pass
பிப் 20, 2025 06:02

டீசலுக்கு பதில் டாஸ்மாக் சரக்க ஊத்தறாங்களா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை