உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒப்பந்தப்படி சம்பளம் வரவில்லை; அரசு பஸ் ஊழியர்கள் அதிருப்தி

ஒப்பந்தப்படி சம்பளம் வரவில்லை; அரசு பஸ் ஊழியர்கள் அதிருப்தி

சென்னை : புதிய ஊதிய ஒப்பந்தத்தின்படி, இந்த மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என்பதால், போக்குவரத்து பணியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.அரசு பஸ் ஊழியர் ஊதிய உயர்வுக்கான, 15வது ஊதிய ஒப்பந்தம், கடந்த மாதம் 29ம் தேதி கையெழுத்தானது. 6 சதவீத உயர்வு என்பதால், குறைந்தபட்சம் 1,420 ரூபாய் முதல் 6,460 ரூபாய் வரை, ஊழியர் சம்பளம் உயரும் என்றும், இந்த ஊதிய உயர்வு உடனடியாக அமலாகிறது என்றும் சொல்லப்பட்டது.இதற்கிடையே, தமிழக போக்குவரத்து ஊழியர்கள், 1.09 லட்சம் பேருக்கு, நேற்று மாத சம்பளம், வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. பழைய சம்பளம் மட்டுமே வந்தது; புதிய ஒப்பந்தத்தின்படி சம்பளம் உயர்வு வரவில்லை.

சி.ஐ.டி.யு., மாநகர போக்குவரத்து பொதுச்செயலர் தயானந்தன் கூறியதாவது:

புதிய ஒப்பந்தத்தின்படி, இந்த மாதம் சம்பளம் உயர்வு வராதது, ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில், அரசு ஊழியர்களுக்கு 55 சதவீதம் அகவிலைப்படி உயர்வு, நான்கு மாத நிலுவையும் வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'சம்பள தேதிக்கு ஓரிரு நாட்களுக்கு முன், புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் புதிய ஊதிய ஒப்பந்தப்படி சம்பளம் வழங்கப்படும். நிலுவைத் தொகை நான்கு தவணையாக வழங்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Raj
ஜூன் 03, 2025 12:28

வரும் ஆனா வராது... கஜானாவை காலி செய்து விட்டார்கள் எங்கிருந்து கொடுக்க?


VENKATASUBRAMANIAN
ஜூன் 03, 2025 07:31

இதுதான் திராவிட மாடல். மக்கள் திருந்த வேண்டும். திமுகவை நம்பினால் இப்படித்தான் நடக்கும். நிர்வாக சீர்கேடுகள். ஒரு காலத்தில் தமிழக பேருந்துகள் நம்பர் 1 ஆக இருந்தன. ஆனால் இப்போது கடைசி இடத்தில் உள்ளது. கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. இதுதான் திராவிட கட்சிகளின் லட்சணம்


raja
ஜூன் 03, 2025 06:42

எப்படி வரும் விடியா திருட்டு மாடல் ஆட்சியில் அனைத்து நிதியையும் தான் ....


கோமாளி
ஜூன் 03, 2025 06:30

சில துறைகளுக்கு சம்பளமே இல்லையாம். இதுல சொன்னபடி வேற


சாமானியன்
ஜூன் 03, 2025 05:32

தமிழக மக்களே மற்றும் போக்குவரத்து அரசியல் ஊழியரே ! கஜானாவில் பணமே இல்லை. அப்புறம் எப்படி அரியர்ஸ் கிடைக்கும்? இப்போது தெரிகிறதா இலவசதிட்டங்களால் கடன்சுமை ஏறி ஆட்சி நடத்த முடியாமல் திணறுகிறார். திமுகவை பொருத்தவரை சொல்லில் சத்யம் கிடையாது. பணம் தான் கடவுள். டாஸ்மாக் ஊழல், குவாரி ஊழல் ஆகியவற்றால் சுருட்டிய பணத்தை தண்ணீரோ, நெருப்போ கொள்ளையிடப் போகின்றது. அறுவடை செய்த நெல்லை மழையிலிருந்து காப்பாற்ற கண்டைனர் வைக்காமல் இருந்த பொறுப்பற்ற அரசை 2026 ல் மறுபடியும் தேர்தெடுக்காதீர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை