உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்

அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை: சிவகங்கை காரைக்குடியில் அரசு பஸ், பால் வேன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். நள்ளிரவு ஒரு மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்து இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை தேனாற்று பாலம் அருகே திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு பஸ்சும், தேவகோட்டையில் இருந்து காரைக்குடியை நோக்கி வந்த தனியார் பால் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்து நள்ளிரவு ஒரு மணிக்கு நிகழ்ந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xf8xgfhi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பால் வேனில் பயணம் செய்த, ஆறுமுகம், கருணா, தமிழ்பாண்டியன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பால் வேனை ஓட்டிய ரூபன், அரசு பஸ் டிரைவர் நாகராஜ், கண்டக்டர் செல்வேந்திர பிரசாத் ஆகியோர் ஆபத்தான நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் பஸ்சில் பயணித்த பயணிகள் 10க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் காரைக்குடி அரசு பஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 4 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். நள்ளிரவு ஒரு மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்து இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் விபத்து நிகழாமல் இருக்க விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Arulmurugan
மே 06, 2025 16:43

இரவு நேரங்களில் வாகனங்கள் தரிக்கட்டு தான் ஓடுகிறது. ஓட்டுனரின் கவனக்குறைவே காரணம்


அப்பாவி
மே 06, 2025 13:38

நேத்து திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் பகலில்தான் போனேன். ஒவ்வொரு நாலு மைலுக்கும் ஒரு baaricade வெச்சு உயிர் வாங்குறாங்க. ஒவ்வொரு ஊரிலிருந்தும் வந்து சேரும் ரோடுகளில் சிக்னல் கிடையாது. அவனவன் குறுக்கே வர்ரானுங்க. நம்ம நெடுஞ்சாலைத் துறையினருக்கு சுத்தமா அறிவோ, அனுபவமோ இல்லைன்னு தோணுது. ஒண்ணு மட்டும் நிச்சயம். அங்கங்கே டோல் வெச்சு துட்டு மட்டும் உருவிடறானுங்க.


Amar Akbar Antony
மே 06, 2025 13:15

பல நாட்களாகவே இதுபோல் விபத்துக்கள் இரவு வேளையில் நடக்குறது. இதற்க்கு முக்கிய காரணமாக உறக்கம் சொல்லப் படுகிறது. இந்த காரணம் உண்மையான பல காரணங்களில் ஒன்று. மற்றவைகளில் கடுமையான காரணி முகப்பு விளக்குகள். அனைத்து வாகனங்களிலும் கண் பார்வை கெடும் அளவிற்கு வைத்துள்ளார்கள். அதன் பயனே சாலையின் நிலை அறியவே அன்றி வரும் வாகனங்களின் ஓட்டுனரின் கண்களை பறிக்க அல்ல. துளியும் கவனமற்று அடுத்தவர் பற்றி கவலையில்லாமல் முகப்பு விளக்கினை எரியவிட்டு வரும் வாகனதின் ஓட்டுனரை குருடாகச்செயும் இந்தியா ஒளி விளக்கை வாகனத்தின் முன் கீழ் பாகத்தில் சாலையின் ஒரு அடி உயரத்திலிருக்குமாறு அந்த பளீர் விளக்கை வைத்தால் சாலை மட்டுமே தெரியும் எதிர்வரும் ஓட்டுநர்களுக்கும் சிரமம் இருக்காது. சாலையின் குண்டு குழிகளும் கண்ணுக்கு தெரியும்.


Krishnamurthy Venkatesan
மே 06, 2025 12:26

"நள்ளிரவு ஒரு மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்து இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும். மிகவும் அபத்தம். ரோடுகள் சரியில்லை, வெட்டிய பள்ளங்களை சரிவர மூடுவதில்லை, தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை, அதிகமான விளம்பர பலகைகள், கண் கூசுமளவிற்கு வாகன முகப்பு விளக்கு, ரோட்டில் கட்சி கொடிகள், பேனர்கள் இவற்றை பற்றி சொல்லாமல் நள்ளிரவில் வாகனம் ஓட்டாதீர்கள் என்று சொல்வது முட்டாள்தனமானது. அப்படியெனில் ராணுவ, மருத்துவ, அத்தியாவசிய சேவைகள் இரவில் எவ்வாறு இயங்கும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 06, 2025 10:57

நற்கதி கிடைக்கட்டும்.. தமிழகம் விபத்துக்களில் மட்டும் சாதனை படைப்பது வேதனைக்குரியது .....


sundarsvpr
மே 06, 2025 08:45

விபத்து ஏற்படுவது கவன குறைவு என்று கருதி விசாரணை இருக்கக் கூடாது. விசாரணை விதி என்பதனையும் கருத்தில்கொள்ளவேண்டும். பெண் பிரவத்தில் பெண் வயிற்றிலிருந்து குழந்தை மாண்டே பிறக்கிறது. அரசு முதலில் கவனத்தில் கொள்ளவேண்டியது. 1. பணியாளர்களின் உடல் நிலை. தகுந்த ஓய்வு. 2. வாகனங்களுக்கும் ஓய்வு தேவை. 3. சீரான வேகம். 4. வழக்குகிற்கு வரும்போது நீதிமன்றம் இந்த விபரங்களை முதலில் கவனிக்கவேண்டும். .


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 06, 2025 08:37

இது ஒன்றை இன்னொரு தறிகெட்டு சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து விபத்தும் இதே இரவு ஒரு மணிக்கு நிகழ்ந்துள்ளது. நவகிரஹ கோள்களின் நகர்வின் சக்தி.


சமீபத்திய செய்தி