உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலையில் கழன்று ஓடிய அரசு பஸ் சக்கரங்கள்; தென்காசியில் அதிர்ச்சி!

சாலையில் கழன்று ஓடிய அரசு பஸ் சக்கரங்கள்; தென்காசியில் அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைக்கால் என்ற இடத்தில், 87 பயணிகளுடன் சென்ற அரசு பஸ்சில், பின்புற ஆக்சில் உடைந்த நிலையில், சக்கரங்கள் தனியாக கழன்று ஓடின. பயணிகள் காயங்களுடன் தப்பினர்.மதுரையில் இருந்து குற்றாலத்திற்கு பயணிகள் 87 பேர் உடன் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைக்கால் என்ற இடத்தில் பஸ்சின் பின்பக்க ஆக்சில் துண்டிக்கப்பட்டது. இதில், பின் சக்கரங்கள் இரண்டும் திடீரென கழன்று ஓடின.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3ygcw9tq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பஸ் பெரும் சத்தத்துடன் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பஸ்சில் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த மாணவர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை, அருகே இருந்தவர்கள் மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். பஸ் சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியதால் பஸ்சில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.இதையடுத்து பஸ் டிரைவர், கண்டக்டர் இணைந்து பயணிகளுக்கு மாற்று பஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். சாலையில் திடீரென பஸ் சக்கரங்கள் கழன்று ஓடிய போது அந்த வழியாக எந்த வாகனங்களும் வரவில்லை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இது குறித்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:நடந்த சம்பவம் குறித்து உரிய அலுவலரிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட அந்த பஸ்சை முறையாக பராமரிக்காத அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Gnana Vel
ஜூன் 21, 2025 14:54

இதுல வேடிக்கை என்ன்னா இதுல பாடி மட்டுமே புதுசு மற்ற அனைத்தும் பழசு புது பஸ்சுன்னு ஏறாதிங்க


Lion Drsekar
ஜூன் 21, 2025 14:02

தனியார் வாகனங்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கு உள்ள சட்டங்கள் அரசு போக்குவரத்துத் துறைக்கு அமல்செய்தால் ஒரு வண்டிகூட ஓட்ட முடியாது. கையில் ஓட்டுநர் உரிமம், வண்டியின் ஆர் சி புத்தகம், புகை சான்றிதழ், உண்மையான Fittness Certificate , வேகக்கட்டுப்பாடு, ஓட்டுநர் சீட் பெல்ட், அதிக அளவில் பயணிகளை ஏற்றுதல், சாலைகளின் சிக்கனலில் நிற்காமல் செல்லுதல், என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம், ஒரு முக்கிய பிரமுகர்கள் செல்கிறார்கள் அவர்களின் வாகனத்துக்கு முன்னாலும் பின்னாலும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை, வேகம் , விமானம் போல் தரையில் பறக்கும் நிலை .. இதைப்பார்த்துஹதான் மக்களும் சினிமா பாணிபோல், அரசன் எவ்வழியோ அவ்வழியில் வாகனத்தை ஒட்டி விபத்துக்கு ஆளாகின்றனர், ஒண்ணுமே புரியலே உலகத்திலே, வந்தே மாதரம்


Ramesh Sargam
ஜூன் 20, 2025 21:15

ஓரம் போ, ஓரம் போ, ருக்குமணி வண்டி வருது. அதுபோல, ஓரம் போ, ஓரம் போ, ஸ்டாலின் அவர்கள் விட்ட வண்டி வருது என்று பாடவேண்டியதுதான்.


D.Ambujavalli
ஜூன் 20, 2025 19:02

நாங்கள் எல்லாம் , இன்னும் நாலு டயர்களுமே கழண்டு விழுந்தாலும் கவலைப்பட மாட்டோம். என்ன ஆட்டுமந்தை வாக்காளர்களுக்கு 200 , 300 க்கு பதில் 500, 1000 வீசியெறிந்து ஜெயித்துவிடுவோம்


Venkatesh Sagadevan
ஜூன் 20, 2025 16:52

திராவிட மாடல்னா என்னானு கேட்கிறவங்களுக்கு இதான் பதில்... நான்காண்டு ஆட்சி... நாம் நாசமா போனதற்கு இதுவே சாட்சி..


Ramasamy
ஜூன் 20, 2025 16:26

திரவிடியா மாடல்


Karthik
ஜூன் 20, 2025 15:40

பழைய இரும்பு தகரம் பிளாஸ்டிக் எல்லாம் பேரீச்சம்பழம்.. பேரிச்சம்பழம்...


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 20, 2025 15:18

திராவிட மாடல் பஸ் இல்லாமல் தனியாக ஓடும் டயர்கள் கண்டுபிடிப்பு ... டீசல் போன்ற எரிபொருள்கள் தேவைஇல்லை ...எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க விஞானிகள் கண்டுபிடிப்பு ..உலக நாடுகள் ஆச்சர்யத்தில் ...


sridhar
ஜூன் 20, 2025 15:15

அதைவிட அதிர்ச்சி அந்த கட்சிக்கு இன்னமும் ஆதரவு தரும் அறிவிலிகள் .


V RAMASWAMY
ஜூன் 20, 2025 15:13

கழன்று ஓடிய பஸ் சக்கரங்கள், புதியதாகத் திறந்த கட்டிடம் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுதல், மருந்தகம் மாவகமாக மாறுதல் இதெல்லாம் சகஜமய்யா, மாடல் அரசல்லவா, சரி செய்து விடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை