உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / " சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்

" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்

அரசு டாக்டர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர், டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை,வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒருபுறம் மறைந்த முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு விட்டு, அவர் பிறப்பித்த அரசாணைக்கு (GO.354) தடை போடுவது வரலாற்று பிழையாக அமையும் என்பதை தமிழக முதல்வர் புரிந்து கொண்டு, அரசு மருத்துவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே 2019 ம் ஆண்டு அரசு மருத்துவர்கள் போராட்டத்தின் போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றுவதாக தெரிவித்த முதல்வர், இன்னமும் சொன்னதை செய்யவில்லை.சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா என்ற கேள்வி எழுகிறது. அரசாணை 354 ஐ அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றமே அரசுக்கு உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை மருத்துவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.அரசாணையை (GO.354) அமல்படுத்த கோரி ஜூன் 11 ம் தேதி மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி பாதயாத்திரையை மருத்துவர்கள் மேற்கொள்ள உள்ளோம். அதற்கு முன்னதாகவே, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்கிட தமிழக முதல்வரை வேண்டுகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K.Ramakrishnan
ஏப் 28, 2025 22:17

அரசுப்பணிகளில் இருப்போருக்கு அள்ளிக்கொடுத்தாலும் போதவில்லை என்று குறை கூறுவதே வழக்கமாகி விட்டது. மாநிலத்தின் மொத்த வரிப் பணத்தில் ௭௫ சதவீதம் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே போய் விடுகிறது என்று ஆதங்கப்பட்டார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. வேலைகிடைத்தால்போதும் என்றுஒப்பந்தஊழியராக சேர்ந்து விட்டு, நிரந்தரம் செய்யும்படி போர்க்கொடி தூக்குகின்றனர். அரசு பஸ் ஊழியர்களுக்கு என்னதான் அள்ளிக்கொடுத்தாலும் திடீரென போராட்டம் என்று பஸ்களை நிறுத்துகின்றனர். பேசாமல் தனியாரிடம் ஒப்படைத்து விடுவது நல்லது.


முக்கிய வீடியோ