உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு டாக்டர்கள் போராட்டம் வாபஸ்

அரசு டாக்டர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை:மருத்துவக் கல்லுாரி வகுப்புகள் புறக்கணிப்பு போராட்டத்தை, அரசு டாக்டர்கள் வாபஸ் பெற்றனர்.தமிழக அரசு டாக்டர் கள் சங்கத்தினர், மருத்துவ காலி பணிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல் மருத்துவக் கல்லுாரி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். மேலும், ஒரு நாள் அடையாளமாக, டிசம்பர் 3ம் தேதி மட்டும், அவசரமில்லாத அனைத்து அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், டாக்டர்கள் சங்கத்துடன் நடந்த பேச்சில் சமரச தீர்வு ஏற்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார். இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் வெளியிட்ட போராட்ட அறிவிப்பை விலக்கிக் கொள்வதாக டாக்டர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ