உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 மீட்டர் சட்டை துணி தரும்படி அரசு டிரைவர்கள் கோரிக்கை

2 மீட்டர் சட்டை துணி தரும்படி அரசு டிரைவர்கள் கோரிக்கை

சென்னை: 'அரசு வழங்கும் சட்டை துணியின் அளவை, இரண்டு மீட்டராக உயர்த்தி வழங்க வேண்டும்; இரண்டு ஷூக்கள் வழங்க வேண்டும்' என, அரசு துறை வாகன ஓட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழக அரசுத்துறை வாகன ஓட்டுநர்கள் தலைமை சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னை சேத்துப்பட்டில் உள்ள சங்கத்தின் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், 'விபத்தில்லாமல், 10 ஆண்டுகள் வாகனம் ஓட்டுவோருக்கு, 500 ரூபாய்; 20 ஆண்டுகள் பணிபுரிவோருக்கு நான்கு கிராம் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. 'இது, 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஊக்கத்தொகையை 5,000 ரூபாயாகவும், தங்க பதக்கத்தை, 8 சவரனாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். 'கோ - ஆப்டெக்ஸ் வாயிலாக, ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும், இரண்டு செட் பேன்ட், சட்டை துணிகள், ஒரு செட் ஷூ வழங்கப் படுகிறது. சட்டைத்துணி, 1.60 மீட்டர் மட்டுமே வழங்குகின்றனர். இதில், அரை கை சட்டை மட்டுமே தைக்க முடிகிறது. உடல் பருமனானவர்களால், சட்டை தைக்க முடியவில்லை. எனவே, இரண்டு மீட்டர் சட்டை துணி, இரண்டு செட் ஷூ வழங்க வேண்டும்' என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை