உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலை நுாலுக்கு அரசு நிதியுதவி

கலை நுாலுக்கு அரசு நிதியுதவி

சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, புராணம், சமூகம் சார்ந்த நாடகம், நாட்டிய நாடகம் தயாரித்து, மேடை ஏற்றும் நிறுவனங்களுக்கு, 1.50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குகிறது. அதேபோல, சிறந்த கலை சார்ந்த நுால்களை எழுதும் எழுத்தாளர் மற்றும் பதிப்பகத்தார் ஐந்து பேருக்கு தலா, 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குகிறது. இதற்கு, வரும் 31ம் தேதிக்குள், 'உறுப்பினர் செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை - 600 028' என்ற முகவரிக்கோ, 'gmail.com, tn.gov.in' என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி