உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை பாலியல் விவகாரம் அரசு உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறது

அண்ணா பல்கலை பாலியல் விவகாரம் அரசு உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை அண்ணா பல்கலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக, தி.மு.க.,வின் மகளிர் அணியைச் சேர்ந்தோரோ, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலராக இருக்கும் கனிமொழியோ ஏன் குரல் எழுப்பவில்லை என பா.ஜ.,வைச் சேர்ந்த குஷ்பு கேள்வி எழுப்பி இருந்தார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக சென்னையில் பேட்டி அளித்துள்ளார் கனிமொழி.

உரிய நடவடிக்கை

அப்போது அவர் கூறியதாவது:மணிப்பூரில் ஏராளமான பெண்கள் அவமானப்படுத்தப்பட்டனர்; தாக்குதலுக்கும் ஆளாகினர். ஆனால், இன்று வரை அம்மாநிலத்துக்கு சென்று, பாதிக்கப்பட்டப் பெண்களைப் பார்த்து நடந்த சம்பவம் குறித்து கேட்டு, ஆறுதல் சொல்லக்கூட போகாதவர் நம் பிரதமர் மோடி. ஆனால், அதை யாரும் பெரிதாக பேசுவதுமில்லை; விமர்சிப்பதும் இல்லை. அதேசமயம், சென்னை அண்ணா பல்கலையில் பயிலும் மாணவிக்கு ஏற்பட்ட கொடுமையை இழைத்தோருக்கு தண்டனை கிடைக்க வேண்டும். இதில், யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.சம்பவம் நடந்ததாக புகார் வந்ததுமே, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.அவரோடு தொடர்புடைய 'அந்த சார் யார்?' என்பது குறித்தும், போலீஸ் அதிகாரிகள் ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டிருக்கும் குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை முடிவில், 'யார் அந்த சார்?' என கண்டிபிடித்து விட்டால், அவர்கள் மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். நடந்த சம்பவத்துக்காக என் வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டுதான், குற்றத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ஞானசேகரனை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி உள்ளனர். வழக்கு கோர்ட்டில் உள்ளது. விசாரணையை நல்லவிதமாக நடத்தி, குற்றத்தை நிரூபித்து, குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதிலேயே அனைவருடைய கவனமும் இருக்க வேண்டும்.

கடுமையான அழுத்தம்

தவிர, தேவையில்லாமல் அரசியல் செய்து, அதன் வாயிலாக கிடைக்கும் லாபத்தை அனுபவிக்க முயலக்கூடாது.பொள்ளாச்சி சம்பவத்தைப் போல, அண்ணா பல்கலை சம்பவத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது. அங்கே பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தும், பல நாட்களுக்குப் பின்பும் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்க்கட்சிகள் பெரும் போராட்டம் நடத்தி, அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்த பின்பே, நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஆனால், சென்னை அண்ணா பல்கலை மாணவி புகார் கொடுத்த சில மணி நேரங்களிலேயே சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.முழுமையான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். சம்பவத்தில், ஞானசேகரன் தவிர வேறு யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.எப்.ஐ.ஆர்., வெளியானதற்கு தமிழக அரசு காரணமில்லை. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவுக்கால் அடித்துக் கொண்டது குறித்து எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால், மதுரையில் போராடிய பா.ஜ., மகளிரை ஆட்டை அடைக்கும் இடத்தில் அடைத்து வைத்தனர் என சொல்கின்றனர். அதை ஏற்க முடியவில்லை. ஆடு அடைக்கும் இடத்தில் ஏன் மனிதர்களை அடைக்கப் போகின்றனர்?இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Raj S
ஜன 06, 2025 22:41

எதுக்கெடுத்தாலும் மணிப்பூர்... எதற்கும் லாயக்கு இல்லாத அப்பன் பெயர் சொல்லி இப்படித்தான் பேசுவார்கள்...


மோகன்
ஜன 06, 2025 19:20

மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் போகலையா மேடம்.


Karthik
ஜன 05, 2025 22:21

Such as waste MP.. களவானி மொழி .


Ramesh Sargam
ஜன 05, 2025 22:11

உன் வீட்டு பின்புறத்தில் நடந்த ஒரு குற்றத்தை பேசும்போது, நீ ஏன் மாற்றான் வீட்டு பின்புறம் நடக்கும் குற்றங்களை பேசி, மக்களின் கவனத்தை திசை திருப்புகிறாய்?


angbu ganesh
ஜன 05, 2025 15:17

இவங்க எல்லாம் ஒரு அமைச்சர் பேசாம ராஜினாமா பண்ணிட்டு போங்கம்மா எதுக்கு எதை முடிச்சு போடற அங்க நடக்கறது உங்க தோழமை கட்சிகளின் சூழ்ச்சி இது கூட புரியாத மாதிரி நடிக்காத


ManiK
ஜன 05, 2025 13:51

அண்ணாமலை பத்திவச்சதும் கோர்ட் தானாக எடுத்த விசாரணையினால் நடவடிக்கை நாடகம் ஆரம்பித்துள்ளது. சென்னை காவல் கமிஷனர் மீது எப்ப நடவடிக்கை எடுப்பீங்க??


Visu
ஜன 05, 2025 13:39

நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழகத்திலிருந்தா மணிப்பூரிலிருந்தா


சந்திரசேகர்
ஜன 05, 2025 13:06

தமிழக மக்கள் இலவசத் திற்கும், முட்டாளகாகவும் இருந்து மற்றும் பரம்பரை அடிமை சின்னம் பார்த்து ஓட்டு போட்டால் யார் எது வேண்டுமானாலும் சொல்லலாம் பேசலாம்


SIVA
ஜன 05, 2025 11:50

மணிப்பூர் கலவரத்தில் ராக்கெட் லாஞ்சர் பயன்படுத்த பட்டு உள்ளது , இதற்கு மேலும் இதை மத வெறி என்று சப்பை கட்டு கட்டினால் இந்த ராக்கெட் லாஞ்சர் தீவிரவாத கலாச்சாரம் உலகம் முழுவதும் பரவும் .....


jayvee
ஜன 05, 2025 11:49

அந்த சாரை கண்டுபிடித்தால் ..கண்டுபிடித்தால் தண்டனை வாங்கி கொடுக்கப்படும் ..உன்னோட முதுகுல இருக்குற அழுக்கை பார் என்றால் மணிப்பூர் அழுக்கை பார்த்து சிரிப்பது வெட்கக்கேடு