உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரியை உயர்த்தி கொடுமைப்படுத்தும் அரசு: அன்புமணி

வரியை உயர்த்தி கொடுமைப்படுத்தும் அரசு: அன்புமணி

சென்னை: நிதி நிர்வாகத்தில் தி.மு.க., அரசின் படுதோல்வியை, சி.ஏ.ஜி., அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2023- - 24ல், தி.மு.க., வாங்கிய, 1 லட்சத்து, 31,597 கோடி ரூபாய் கடனில், ஒரு பங்குக்கும் குறைவாக, 40,500 கோடி ரூபாயை மட்டுமே, மூல தன உருவாக்கத்திற்காக செலவிட்டு உள்ளனர். இது, தி.மு.க., அரசின் மோசமான நிதி நிர்வாகத்தைக் காட்டுவதாக, மத்திய கணக்கு தணிக்கையாளரான சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. ஒரு மாநில அரசு, வருவாய் செலவுகள் அனைத்தையும், வருவாய் வரவுகளுக்குள் முடித்து, உபரியை ஏற்படுத்த முடியும். அது தான் உட்கட்டமைப்புகளை உருவாக்க, அதிக முதலீடு செய்ய உதவும். ஆனால், கடந்த ஐந்து ஆண் டுகளில், ஒருமுறை கூட வருவாய் உபரியை ஏற்படுத்தவில்லை. இது, தி.மு.க., அரசின் படுதோல்வியைக் காட்டுகிறது. ஒருபுறம் கடனை வாங்கிக் குவிக்கும் தி.மு.க., அரசு, அதை சரியாக செலவழிக்காமல் வீணடித்துக் கொண்டிருக்கிறது. அதை சமாளிக்க வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி, மக்களை கொடுமைப் படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை