உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்: அரசு பெருமிதம்

மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்: அரசு பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அரசின் முதன்மை திட்டங்களால், மின்னணு ஏற்றுமதியிலும், தோல் பொருள்கள், ஜவுளி துணிகள் ஏற்றுமதியிலும், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இதுதொடர்பான, தமிழக அரசின் அறிக்கை:முதல்வர் ஸ்டாலினின் தொடர் முயற்சிகளால், தொழிற்சாலைகள் புதிது புதிதாக துவக்கப்பட்டுள்ளன. நம் நாட்டிற்குள்ளும், வெளிநாடுகளுக்கும் சென்று, 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு, அதன் வழியே, 10.27 லட்சம் கோடி ரூபாய் புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. அதன்வாயிலாக, உருவாக்கப்பட்டுள்ள, 32.23 லட்சம் வேலை வாய்ப்புகளால், தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் என்று புகழப்படுகிறது.தி.மு.க., அரசின் திட்டங்களால், தமிழகத்தில் உற்பத்தியாகும் பொருட்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில், 2020 - 21ல் 2,615 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்த ஏற்றுமதி, 2024 - 25ல் 5,207 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களை விட அதிகமாக, 1,465 கோடி டாலர் மதிப்புடைய, மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து, இந்தியாவில் முதலிடம் என்ற பெருமையையும் தமிழகம் பெற்றுள்ளது.இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதிலும், தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தியது. இதன் காரணமாக, 2020 - 21ல், 2.9 கோடியாக இருந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை, 2024 - 25ல் 3.87 கோடியாக உயர்ந்துள்ளது. உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம், தேசிய அளவில், 26 சதவீதம். தமிழகத்தில், 2023 - 24ல் 51.3 சதவீதமாக உயர்ந்தது. மாநிலம் எங்கும் பெரிய அளவில் ஜாதி மோதல்களோ, தொழிற்சாலைகளில் பிரச்னைகளோ இல்லாமல் அமைதி நிலவுவதும், மாநிலத்தின் நிலையான வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதி தயார்நிலை, தோல் பொருட்கள், ஜவுளி துணிகள் ஏற்றுமதி போன்றவற்றிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. புத்தாக்க தொழில்கள் தரவரிசை பட்டியலில், 2018ல் கடைசி இடத்தில் இருந்த தமிழகம், 2022ல் முதலிடம். அதிக எண்ணிக்கையில் செயல்படும் தொழிற்சாலைகள், அதிக தொழிலாளர்கள் போன்றவற்றிலும், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
மே 12, 2025 09:11

(ஆப்பிள்) பாக்ஸ்கான் தனது அடுத்த பெரிய ஆலையை கர்நாடகத்தில் உருவாக்குகிறது. ( இங்கு மகன் மருமகனுக்கு கப்பம் கட்டி மாளாது. )


பாமரன்
மே 12, 2025 08:30

இந்த அறிக்கையில் முதல்வர் முயற்சி...டீம்காவின் திட்டம் போன்ற தேவையற்றத பார்த்தால் உண்மைதான்......


Kalyanaraman
மே 12, 2025 08:27

ஆப்பிள் போன்ற மொபைல் ஃபோன் ஏற்றுமதியில் விடியல் என்ன செய்தது?? விடுதியில் உணவு சரியில்லை என்று விடியல் போராட்டம். நிறுவனத்தை மிரட்டும் வகையில் சாம்சங் -கில் தொழிலாளர்கள் போராட்டத்தில் விடியல் பின்புலமாக இருந்தது நம் யாவரும் அறிந்ததே.


Kasimani Baskaran
மே 12, 2025 05:26

இதில் எவ்வளவு மதிப்பு கூட்டினார்கள் என்று கேட்டால் இது எவ்வளவு பெரிய காமடி என்று தெரிய வரும். ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் கடை விரித்தால் பில்லியன் டாலர் வர்த்தகம் என்பது எளிது. அதே சமயம் எவ்வளவு மதிப்பு கூட்டினார்கள் என்று விவாதித்தால் உண்மை வெளிவரும்.


பாமரன்
மே 12, 2025 08:33

தமிழ் நாட்டில் ஆப்பிள் மூலம் வந்தது காசி சொல்றது சரிதான்... ஆக்சுவலா இந்தியா முழுவதும் ஆத்மநிர்பர்பர்புர்புர் திட்டத்தில் நடப்பதும் இதுதான்...மற்ற துறைகளில் நல்ல வளர்ச்சி மறுப்பதற்கில்லை... அதாவது தமிழ் நாட்டில்...


Kasimani Baskaran
மே 12, 2025 10:57

அங்கு தீம்க்கா யூனியன் ஆரம்பித்து காமடி செய்யாமல் இருக்கவேண்டும்.


முக்கிய வீடியோ