உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவிக்கு பிறந்த குழந்தை; அரசு பள்ளி ஆசிரியர் கைது

மாணவிக்கு பிறந்த குழந்தை; அரசு பள்ளி ஆசிரியர் கைது

சேத்தியாத்தோப்பு: கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, கடந்தாண்டு பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்ற 17 வயது மாணவி ஒருவர், தற்போது சென்னையில் பி.எஸ்சி., நர்சிங் படிக்கிறார். இந்நிலையில், அந்த மாணவிக்கு நான்கு நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்தபோது, மேல்நிலை பள்ளியில் படித்தபோது வேதியியல் ஆசிரியர் மலர் செல்வன் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். மாணவியின் பெற்றோர், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.விசாரணையில், புடையூர் காலனியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் மலர்செல்வன், 50, என்பவர் மாணவியை பலாத்காரம் செய்தது தெரிந்தது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, மலர்செல்வனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு திருமணமாகி, மனைவி, இரு பெண் குழந்தைகள், ஆண் குழந்தை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

ALWAR
டிச 22, 2024 08:01

....காட்டிய வழியில் ஆசிரியர்


Narayanasamy
டிச 21, 2024 10:21

இவர்களை எல்லாம் என்ன செய்வது? ஒரு என்ன படிப்பு படித்தார்கள் ஒழுக்கம் பற்றிய அறிவே இல்லை தன்னை நம்பி வந்த சிறு பாலகர்களை தன் வீட்டுக்கு குழந்தைகள் போல் பாதிக்காமல் இப்படி ஒரு கீழ்த்தரமான காரியத்தை செய்த இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்


Sankaran Natarajan
டிச 20, 2024 22:55

கெமிஸ்டிரி ஒர்க்அவுட் ஆகிருச்சோ?


Sankaran Natarajan
டிச 20, 2024 22:47

சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஒரு ஆசிரியர் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது பிரேக்கிங் நியூஸ் போட்டு குரலெழுப்பிய தமிழக மீடியாவின் தற்போதைய மயான அமைதி பிரமாதம். அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அன்று சீறி எழுந்தார். இன்று அவருக்கும் இதுதான் நிலைமை என்ற மெச்சூரிட்டி வந்துவிட்டது. வாழ்க தமிழக கல்வித்துறை.


menaha
டிச 19, 2024 23:40

why blame reservation..in private schools also these kind of harassment is happening...fake NCC ..where is the reservation


sasidharan
டிச 19, 2024 14:03

மாணவிக்கு என்ன பாடம் நடத்தினார் இந்த ஆசிரியர். குழந்தை பிறக்கும் வரை குடும்பத்திறனர்க்கு தெரியவில்லையா . என்ன கன்றாவிட இது


ram
டிச 19, 2024 14:02

இதுபோல ஆட்கள் எல்லாம் reservation மூலம் வருவதால் இந்த பிரச்சனை


Mohamed Ibrahim
டிச 25, 2024 20:30

ஏன் ரிசர்வேஷன் இல்லாமல் மெரிட்டில் வரும் ஆசிரியர்கள் யாரும் தவறு செய்ய மாட்டார்களா?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 19, 2024 13:13

சுட்டுவிடுங்கள் .....


Muralidharan S
டிச 19, 2024 11:20

பள்ளியிலேயே ஆசிரியர்களிடையே மற்றும் மாணவர்களிடையே பாலியல் குற்றங்கள், போதை வஸ்த்துக்கள், மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கங்கள் இது எல்லாம் இன்று சர்வ சாதாரணமாகி விட்டது. ஒரு நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்கி, நாட்டை முன்னேற்ற வேண்டிய வேலை ஆசிரியர்களுடையது. ஒரு காலத்தில் மிகவும் மதிக்கத்தக்க, மரியாதையாக பார்க்கப்பட்ட சமூகம் ஆசிரியர் சமூகம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள், இப்படி ஆயிட்டாங்க.. ஒழுக்கத்திற்கும், நீதிக்கும், நேர்மைக்கும் முன்மாதிரியாக இருந்த தலைவர்களை பின்பற்றி நடந்து இருந்தால், இப்படிப்பட்ட அசிங்கமான/அவலமான நிலைமை ஆசிரியர்கள் சமூகத்திற்கு வந்து இருக்காது.. அறுபது ஆண்டு கலாச்சார-சீரழிவு.


Sidharth
டிச 19, 2024 11:45

எல்லாத்துக்கும் 60 ஆண்டுதான் காரணமா ?


ஆரூர் ரங்
டிச 19, 2024 10:29

இந்தக் காலத்துல ஆறாம் வகுப்பு மாணவிகளுக்குக்கூட எல்லாம் தெரிந்துள்ளது. அறியாமல் நடந்த விஷயமாக இருக்க வாய்ப்பு குறைவு.


முக்கிய வீடியோ