உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனித்தனியாக விசாரித்த கவர்னர்; அண்ணா பல்கலைக்கு அதிரடி உத்தரவு!

தனித்தனியாக விசாரித்த கவர்னர்; அண்ணா பல்கலைக்கு அதிரடி உத்தரவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலையில் இன்று ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு கவர்னர் ரவி, மாணவ-மாணவிகளிடம் தனித்தனியாக கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்தார்.சென்னை அண்ணா பல்கலையில் டிச., 23ம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zbx8wqw3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவ்விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஐகோர்ட் தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.இந்நிலையில், பல்கலை வேந்தரான கவர்னர் ரவி, இன்று அண்ணா பல்கலையில் ஆய்வு மேற்கொண்டார். பல்கலையில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள், சி.சி.டி.வி., கண்காணிப்பு, அனைத்து நுழைவாயில்களிலும் இருக்கும் பாதுகாப்புகள் குறித்து பல்கலை நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.மாணவ-மாணவிகள் இரு தரப்பினரிடமும் கவர்னர் தனித்தனியாக கலந்துரையாடினார். பல்கலை வளாகத்தைப் பாதுகாப்பாக மாற்ற மாணவர்கள் கொடுத்த பரிந்துரைகளைக் கேட்டறிந்தார்.தொடர்ந்து, மாணவர்களுக்கான பாதுகாப்பு சூழலை மேம்படுத்த வேண்டும், மாணவர்கள் எழுப்பிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலை நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டர்.மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனே பிரதானமானது என்றும், அண்ணா பல்கலையில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இச்சம்பவம் குறித்து அச்சமடைய வேண்டாம் என்றும் கவர்னர் ரவி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Raghavan
டிச 29, 2024 17:26

ஏன் இன்னும் தாடிக்கார அமைச்சர் ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. ஒருவேளை சார் என்பது இவராக இருக்குமோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.


Ravi
டிச 29, 2024 09:39

I wonder why governor is issuing orders in his own authority instead of making complaints against rulings government. Hence it's implied that he is suffering from guilty for his inaction. He was leading all vice chancellor with his own power but now he is himself behind the screen.


venugopal s
டிச 28, 2024 22:39

குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும் என்பார்கள். ஆளுநர் அவர்களின் ரியாக்ஷன் அதைப் போலத்தான் உள்ளது!


xyzabc
டிச 31, 2024 11:01

ஸ்டாலினுக்கே எந்த உணர்வும் இல்லை. தூத்துக்குடியில் டீ குடிப்பதும், ரிப்பன் கட் செய்யவும் நேரம் இருக்கு. மாணவி எக்கேடு கெட்டால் என்ன? மானம் கெட்ட தி மு கவினர் சொறணை இருந்தால் பதவி விலக வேண்டும்.


Velan Iyengaar
டிச 28, 2024 22:17

இந்த வேலைய இந்த நியமன பதவி போஸ்ட்மேன் இந்த நிகழ்வுக்கு முன்னாடி செய்வதை யாரு தடுத்தா ??? எல்லாம் அரசியல் படுத்தும் பாடு ...


xyzabc
டிச 31, 2024 11:07

முதல்வர், துணை முதல்வர், செழியன் இவர்கள் போஸ்ட்மேன் வேலை செய்ய கூடாதா? வெறும் வெட்டி முறித்தல். வாய் கிழிய கவர்னரை குறை சொல்ல வேண்டியது.


Constitutional Goons
டிச 28, 2024 22:02

தன் கடமையை தட்டிக்கழிக்கும் மூடி மறைக்கும் அரசியல் தந்திரம்


தமிழன்
டிச 28, 2024 21:29

பதிவாளரை மாற்ற சொல்லும் கவர்னர், மாநகர கமிஷனரை வேறு மாநிலத்திற்கு மாற்ற சொல்லுங்க..


தமிழன்
டிச 28, 2024 21:18

போராட்டம் செய்பவர்கள் .. வர சொல்.. வர சொல்.. முதல்வரை வரச் சொல் என்ற விண்ணை முட்ட கோஷமிட்டு முதல்வரை மக்கள் மத்தியில் பேச வைக்க வேண்டும். இல்லை என்றால் மக்களுக்கு சந்தேகம் அதிகமாகும். துணை முதல்வரையும் காணவில்லை.. வழக்கம் போல அவர் மாலையில் அல்லது இரவில் கூட வந்து இது தொடர்பாக பேசி இருக்கலாம்.. இந்த இரண்டு பேரை தவிர எல்லோரும் பேசுகிறார்கள் என்பதால், பதுங்கி பயந்து வெளியே தலை காட்டாமல் இருப்பதால், நீதி மன்றம் இவர்களை நீதி மன்றத்திற்கு வர அழைப்பானை உத்திரவு பிறப்பிக்க வேண்டும்.


தமிழன்
டிச 28, 2024 21:14

கவர்னர் போய் பார்க்கிறார். முதல்அமைச்சர் காணவில்லை.. துணை முதல்வரும் காணவில்லை.. தலைமறைவாக பதுங்கி இருப்பதன் காரணம் என்ன? இவர்கள் மீது நீதிமன்றம் உட்பட யாருக்குமே சந்தேகம் வரவில்லையா ?பொதுவாக குற்றம் செய்தவர் தான் தலைமறைவாக இருப்பார்கள் என்பது நாம் அறிந்ததே. உதாரணம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி இப்போ முதல் அமைச்சரும், துணை முதல் அமைச்சரும் வெளியே காணவில்லை.. அதனால் மக்களுக்கு சந்தேகம் வலுக்கிறது...


அப்பாவி
டிச 28, 2024 20:16

பிரியாணி, ஞானசேகரன், சார், ஆடி கார் பத்தி ஏதாவது துப்பு கிடைச்சுதா?


தமிழன்
டிச 28, 2024 21:25

கட்சி விழாவுக்கு பிரியாணி யார் சப்ளை பண்றாங்க என்று விசாரித்தால், மேலும் பல உண்மைகள் வரும்.. யார் அந்த சார் என்பது தெரியும்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 28, 2024 23:00

துப்பு அண்ணாமலை கைக்கு போகக்கூடாது என்று எல்லா தொழில்நுட்பம் சரியாக இயங்க வைத்து கொண்டு இருப்பார்கள். விசாரிச்சு பார்க்கோனும்


S. Venugopal
டிச 28, 2024 19:23

அதிகமாக மாணவ மாணவியர்கள் பயிலும் கல்லுரிகளுக்கு சி ஐ எஸ் எப் / சி ஆர் பி எப் மூலம் பாதுகாத்தால் பல கோணங்களில் மாணவ மாணவியர்களுக்கம் ஆசிரியர்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.


Barakat Ali
டிச 28, 2024 22:37

ஒரு அடிமைக்கே பல்கலையில் சட்டம் ஒழுங்கு குறித்த நம்பிக்கை இல்லையென்றால் ???? பல்கலை மாநிலப்பட்டியலுக்கு வேண்டாமா கொத்தடிமையே ????


vadivelu
டிச 29, 2024 07:03

ஆமென்


புதிய வீடியோ