உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டி.என்.பி.எஸ்.சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்: 2 ஆண்டுகளுக்கு பிறகு வந்த உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்: 2 ஆண்டுகளுக்கு பிறகு வந்த உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டி.என்.பி.எஸ்.சி தலைவராக எஸ்.கே.பிரபாகரை நியமித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l39eyrpd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தலைவராக இருந்த பாலச்சந்திரன், 2022 ஜூனில் ஓய்வு பெற்றார். அதன்பின், உறுப்பினராக உள்ள முனியநாதன், பொறுப்பு தலைவராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில், எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ்-யை டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.வருவாய் துறை கமிஷனராக உள்ள எஸ்.கே.பிரபாகர், விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவராக பொறுப்பேற்க உள்ளார். பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அவர் பதவியில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்தது. அதனை கவர்னர் ரவி பரிசீலிக்காமல் இருந்துவந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anand
ஆக 13, 2024 17:34

இவரும்


sundarsvpr
ஆக 13, 2024 17:11

இரண்டு ஆண்டுகளாக பதவி நிரப்பாமல் இருந்தது அரசின் இயலாமையா அல்லது வேறுகாரணங்களா? முன்பாக பரிந்துரை செய்யப்பட்ட நபரை நியமனம் செய்திட ஆளுநரை வலியுறுத்த ஏன் அரசு தயங்கியது? ஆளுநர் தயங்கியது நியாயம் என்பது நிச்சியமாகிறது.


சுரேஷ்
ஆக 13, 2024 17:52

ஆளுநர் என்ன செய்தாலும் சரி???


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை